மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை
“மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!” என்ற தலைப்பில் கழகத் தோழர்கள் ஜாதி எதிர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி விவரம்:
சென்னை: ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தெருமுனைக் கூட்டம் 12.08.2025 அன்று திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் நடைபெற்றது. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), தலைமையில், லட்சுமணன் முன்னிலையில் நடைபெற்றது.
சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்களை தோழர்களை வெகுவாக ஈர்த்தது. ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நெல்லை கவின் படத்திறப்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சாரநாத் (மாவட்டச் செயலாளர் -விசிக) ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கழக செயல்பாடுகளை பாராட்டி உரை நிகழ்த்தினார். நிறைவாக சிறப்புரையாற்றிய பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் தேவை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இரண்டாம் நாள்: 13.08.2025 அன்று சென்னை சி.என்.கே சாலை திருவல்லிக்கேணி பகுதியில் த.நா சூர்யா(திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி காண்போரை வெகுவாக ஈர்த்தது.வெங்கடேஷ்(பகுதிச் செயலாளர் விசிக), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர் திவிக), ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந்திரகுமார் தேரடி( ஊடகவியலாளர்) ஜாதி பெருமைக்குரிய அடையாளமா? என்ற கேள்விகளோடு பல வரலாற்று செய்திகளை எடுத்துக்காட்டி பரப்புரையின் தேவை குறித்து நிறைவுரையாற்றினார்.
சாரநாத் (மாவட்டச் செயலாளர் விசிக) கழகத்தின் இந்த பரப்புரை ஒருங்கிணைத்த சென்னை இரா.உமாபதியை (மாவட்டச் செயலாளர்) பாராட்டி பயனாடை அணிவித்தார். ஆய்வாளர் தமிழ் காமராசன் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். உரையாற்றிய தோழர்களுக்கு கழக வெளியீடுகளை தோழர்கள் கோபி, த.நா சூர்யா, அசோக் ஆகியோர் வழங்கினர்.
மூன்றாம் நாள் (14.08.2025) அன்று NKT பள்ளி அருகில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் ராஜேஷ் (பகுதி செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. சிற்பி ராசனின் மந்திராமா? தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சி பொதுமக்களை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்தது. தொடக்க உரையாக இரா.உமாபதி (மாவட்டச் செயலாளர்) உரையாற்றினர். மைனர் (யூ2புரூடஸ்) ஜாதி வெறி அரசியலை தன்னுடைய நகைச்சுவை பாணியில் சிறப்புரையாற்றினார். கருத்துரையாற்றிய மைனர் அவர்களுக்கு சைதை அன்பரசன் கழக வெளியீடுகளை வழங்கினார். பொதுமக்கள் ஆர்வத்துடன் கருத்துக்களை கேட்டுச் சென்றனர்.
தெருமுனைக் கூட்டங்களை இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) ஒருங்கிணைத்தார்.ரங்கநாதன்(அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர்), ஆய்வாளர் தமிழ் காமராசன், கழகத் தோழர்கள் தபசிகுமரன் (தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்), ம.கி எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத்தலைவர்), தட்சணாமூர்த்தி (வடசென்னை மாவட்ட அமைப்பாளர்), அ.வ வேலு (வடசென்னை மாவட்டச் செயலாளர்), தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இளவரசன், மாணவர் கழக ஈரோடு மாவட்ட அமைப்பாளர் சர்மிளா, மாணவர் கழகத் தோழர் குடிஅரசு, குறளரசி, மற்றும் வட சென்னை தோழர்கள் அருள்தாஸ், ஏசுக்குமார், மயிலாப்பூர் சுகுமார், கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் கழகத்தின் தொடக்க நாளான ஆக.12 மற்றும் ஆக.13 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
ஆக.12 முதல் கூட்டம் மாலை 04.00 மணியளவில் திருப்பூர் ஒன்றியம் அருள்புரம் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சண்முகம் (பல்லடம் ஒன்றிய அமைப்பாளர்) தலைமை தாங்கினார்.
ஆக.12 இரண்டாவது கூட்டம் மாலை 06.00 மணி அளவில் பொங்கலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பொங்கலூர் கார்த்தி தலைமை தாங்கினார்.துரைசாமி (கழகப் பொருளாளர்), கணக்கன் (மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர்), பரிமளராசன் (கழக சமூக ஊடக பொறுப்பாளர்), முகில்ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), முத்து (மாநகர அமைப்பாளர்)ஆகியோர் உரையாற்றினர்.
தோழர்கள் செம்பரிதி, கோவிந்தராஜ் (பல்லடம் நகர அமைப்பாளர்) ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். கழக ஆதரவாளர் தோழர் மயில்சாமி கழகத் தோழர்களுக்கு தேநீர் வழங்கி சிறப்பித்தார்.
ஆக.13 இரண்டாம் நாள் பொதுக்கூட்டம் பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் முதல் கூட்டமாக மாலை 04.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு சண்முகம் (பல்லடம் ஒன்றிய அமைப்பாளர்) தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பரிமளராசன் (கழக சமூக ஊடகப் பொறுப்பாளர்), தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி, முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்) ஆகியோர் உரையாற்றினர். தோழர் செம்பரிதி நன்றியுரை ஆற்றினார்.
கழகத்தின் தெருமுனை கூட்டத்திற்கு வருகை தந்த திமுக முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் திருமூர்த்தி அவர்கள் கழகத்தின் பரப்புரையை வாழ்த்தியும் பாராட்டியும் பேசி கழகத் தோழர்களுக்கு புத்தகங்களை பரிசளித்தார். வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.
ஆக.13 இரண்டாவது தெருமுனைக் கூட்டம் பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு கோவிந்தராஜ் (பல்லடம் நகர அமைப்பாளர்)தலைமை தாங்கினார். கூட்டத்தில் பரிமளராசன் (கழக சமூக ஊடகப் பொறுப்பாளர்), துரைசாமி (கழகப் பொருளாளர்), முகில்ராசு (மாவட்டத் தலைவர் ) ஆகியோர் உரையாற்றினர்.மாணவர் கழகத் தோழர் ஈழமாறன் நன்றியுரையாற்றினார்.
தெருமுனைக் கூட்டங்களுக்கான ஏற்பாட்டுப் பணிகளை துரைசாமி (கழகப் பொருளாளர்) அவர்களும், ஒருங்கிணைப்புப் பணியை முகில் ராசு (மாவட்டத் தலைவர்) அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.இத்தெருமுனைக் கூட்டங்களில் சிவானந்தம் (மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்), அய்யப்பன் (திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), மாதவன் (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), மாரிமுத்து (திருப்பூர் மாநகர துணைத் தலைவர்), சிறீஜா, மாணவர் கழக கனல்மதி, சுபாஷ், ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார்முழக்கம்இதழ்21082025
