Category: நூல் அறிமுகம்

பயணத்திற்கு நூல்கள் வெளியீடு

பயணத்திற்கு நூல்கள் வெளியீடு

அகமண முறையை அகற்றுவோம்! ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்! எனும் கேள்வி பதில் வடிவில் ஜாதி எதிர்ப்பு கருத்துக்களை உள்ளடக்கி 16 பக்கத்தில் ரூ.5 விலையில் சிறுநூல் வெளியிடப்பட்டுள்ளது. பேய், பில்லி, சூனியம், வாஸ்து, தீ மிதித்தல் எனும் தலைப்பில் மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் விளக்கத்துடன் செய்திகள் இடம் பெற்றுள்ளன. 24 பக்கம் கொண்ட இந்நூல் ரூ.10 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 13082026

கரூரில் ஈழப் படைப்பாளிகளின் நூல்கள் அறிமுகம்

கரூரில் ஈழப் படைப்பாளிகளின் நூல்கள் அறிமுகம்

தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக தியாகி “பொன் சிவகுமரனின்” 52 -ஆவது ஆண்டு நினைவுகளோடு மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும் 11 நூல்கள் அறிமுக விழா 27.06.2026 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் கரூர், அய்யப்பா சேவா சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சண்முகம் (சாமானிய மக்கள் கட்சி ) அவர்கள் தலைமை வகித்தார். முகிலன் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் – காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்) அவர்கள் முன்னிலை வகித்தார். ஆ. பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிவேதா சத்யாராஜ், முனைவர் சாலினி (பேராசிரியர், ஆய்வாளர்), முனைவர் ப. கிருட்டிணவேணி (முதுகலை அறிவியல் யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகியோர் நூல்களைப் பற்றி கருத்துரையாற்றினர். புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் நூல்களைப் பற்றி மதிப்புரையாற்றினார். “கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ...

புத்தக வெளியீட்டு விழா!

புத்தக வெளியீட்டு விழா!

மேட்டூர்த் தமிழ்ச் சங்கம், வாசகர் வட்டம், மேட்டூர் கிளை நூலகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நூலாசிரியர் அமிர்தம் பீட்டர் ராஜன் அவர்கள் எழுதிய ‘தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பகுதி-1 தமிழர்கள் வீழ்ந்த வரலாறு’ என்ற நூல் 29.05.2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் மேட்டூர், பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். மேட்டூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆசிரியர் கு. பாரி முன்னிலை வகித்தரார். ஆய்வறிஞர் இரா.இலட்சுமி நாராயணன் வரவேற்புரையாற்றினார். கவிஞர் வை. சரவணன் நூல் அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் சிலம்பரசன் நூல் திறனாய்வு செய்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பகுதி-1 தமிழர்கள் வீழ்ந்த வரலாறு புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் அனுராதா புத்தகத்தை பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் அமிர்தம் பீட்டர் ராஜன் நூல் ஏற்புரையாற்றினார். மருத்துவர் சந்திரமோகன், எழுத்தாளர் மே. கா கிட்டு, வழக்கறிஞர்...

தமிழீழ எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம்!

தமிழீழ எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம்!

புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி சார்பில் 2009 மே-18 தமிழ் இன அழிப்பு நாள் நினைவுகளோடு, “தமிழீழ வரலாற்றில் பெண் புலிகள் நூல்கள் அறிமுகம் நிகழ்ச்சி” 18.05.2026 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி, மறைமலை அடிகள் சாலை, தோழமை ஒன்றுகூடல் அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி தலைவர் அன்பு எழிலன் வரவேற்புரையாற்றினார். எந்த வித எதிர்பார்ப்புமின்றி பெரியாரிய கொள்கைக்காக கழகப் பணிகளை செய்தும், கொள்கைக்காக பல வழக்குகளை சந்தித்து சிறைக்குச் சென்ற தோழர்.கடலூர் தாமரைகண்ணன் முயற்சியில் தமிழ் ஈழ எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுகின்றன. அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் லோகு. அய்யப்பன் பாராட்டி சால்வை அணிவித்தனர். “கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ தியாகச்சுடர் அன்னைபூபதி, கனவுக்கு வெளியேயான உலகு, தமிழீழ...

அறிவியலை பாடமாக அல்ல வாழ்வியலாக ஏற்க வேண்டும்! ‘நாத்திகம்’ நூலை வெளியிட்டு மருத்துவர் எழிலன் பேச்சு

அறிவியலை பாடமாக அல்ல வாழ்வியலாக ஏற்க வேண்டும்! ‘நாத்திகம்’ நூலை வெளியிட்டு மருத்துவர் எழிலன் பேச்சு

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கொளத்தூரில் கழகப் பெண்களே தலைமையேற்று நடத்திய நாத்திகர் விழாவை ஒட்டி கடந்த 5 மாதங்களுக்கு, மேல் புரட்சிப் பெரியார் முழக்கத்தில் எழுதிய ‘கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை’ தொடர் கட்டுரைகள் கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் முயற்சியில், ‘நாத்திகம் – சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்’ நூலாக தொகுக்கப்பட்டு, 12.11.2025 அன்று சென்னை முற்போக்கு புத்தகக் காட்சியில், கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் அரங்கு எண் 22-இல் வெளியிடப்பட்டது. ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் நூலை வெளியிட, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வாலாசா வல்லவன் பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்டுப் பேசிய எழிலன் நாகநாதன், “திமுக இளைஞர் அணி சார்பாக அறிவுத் திருவிழா சிறப்புற நடைபெற்று வருகிறது. கருத்தரங்கம், கண்காட்சி என பல்வேறு முற்போக்கு கருத்தியல் கொண்ட தோழர்கள் தங்களின் படைப்புகளை வைத்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் எழுதியுள்ள ‘நாத்திகம்...

கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரியாரின் ஆதரவு

கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரியாரின் ஆதரவு

பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர்(எஸ்வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார்: ஜாதி தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில் நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல். கடந்த இதழின் தொடர்ச்சி…. கீழ்வெண்மணி படுகொலை தொடர்பாக பெரியார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே திட்டவட்டமான மறுப்புகள் வெளிவந்துள்ளன. எஸ்.வி.ஆர் இந்த நூலிலும் ஒரு தனி அத்தியாயத்தையே ஒதுக்கி விரிவாக பெரியார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இதேபோன்று தீவிர காங்கிரஸ்காராகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்தவருமான எல்.இளையபெருமாள் பெரியார் தலித் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார், பெரியார் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கே.பி.எஸ் மணி, தொண்டு வீராசாமி ஆகியோர் பெரியார் தலித் மக்களின் ஆதரவாளர் அல்ல...

பெரியாரை கொச்சைப்படுத்தும் அறிவுஜீவிகள்

பெரியாரை கொச்சைப்படுத்தும் அறிவுஜீவிகள்

பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர்(எஸ்வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார்: ஜாதி தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில் நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார் அம்பேதகர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல். கடந்த இதழின் தொடர்ச்சி…. தமிழ்நாட்டில் 20 விழுக்காடு தலித் மக்கள் உட்ஜாதிப் பிரிவுகளாக பிரிந்துள்ளனர். உண்மையில் தலித் மக்களின் மேம்பாட்டை விரும்புவோர் இந்த பிரிவினருக்கு இடையே ஒற்றுமையை உருவாக்கி தலித் அல்லாத முற்போக்கு சக்திகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும். குறிப்பாக தலித் அல்லாத பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்டுகளோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் எஸ்விஆர். மாறாக சில தலித் அறிவுஜீவிகள் பெரியாருக்கு எதிரான கருத்துகளை அச்சு ஊடகங்களின் வழியாக பரப்புகிறார்கள். இந்த போக்கு 1990- களிலேயே தொடங்கிவிட்டது என்கிறார் எஸ்.வி.ஆர். பெரியார்...

கடவுளுக்கு மாநாடு எதற்கு?

கடவுளுக்கு மாநாடு எதற்கு?

அர்ச்சனை, வழிபாடு, சடங்குகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்து கடவுள்களுக்கு, இப்போது சர்வதேச மாநாடுகள் நடக்க தொடங்கிவிட்டன. இதற்கு வழிகாட்டியதே தமிழ்நாடு இந்து அறநிலையத்துறைதான்! முருகனுக்கு சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வழியாக அதை தொடங்கி வைத்தார். இப்போது திருவாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவை முன்னிட்டு, சர்வதேச அய்யப்பன் மாநாடு, பம்பையில் வரும் செப் 20-ம் நடக்க இருக்கிறது. ஏழு மாநில முதல்வர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள், தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். 10 வயதில் இருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனுமதிக்கப்படுவது இல்லை.உச்ச நீதிமன்றம் இது “மதத் தீண்டாமை “என்று அறிவித்த பிறகும், தீர்ப்பு அங்கே அமலாகவில்லை. தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நேற்று அளித்த பேட்டியில், அய்யப்பன் பக்தர்களாக நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இந்த மாநாட்டில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார். இக்கூற்றின்படி பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது தெரியவில்லை....

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

People’s literature பதிப்பகம் வெளியிட்டுள்ள “Periyar: Caste, Nation and Socialism” நூலின் அறிமுக விழா, (24.8.25), சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்தினார். பெரியார் மீது எழும் கேள்விகள் அல்லது குற்றச்சாட்டுகள், அல்லது மனதறிந்து பேசுகிற பொய்கள் எல்லாவற்றையும் விளக்கும் நோக்கத்தோடு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கரின் பார்வைகள், புத்தம் குறித்த பெரியார், அம்பேத்கர் கருத்துக்கள் ஆகியவற்றை முதன்மை தலைப்பாக பதிவு செய்துள்ளார். ரங்கூன் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் கலந்து கொண்ட செய்திகளையும், வன்முறைக்கு எதிராக பெரியார் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வை தொகுத்து வழங்கினார். கோவி. கனக விநாயகம் (துணைப் போராசிரியர், எஸ்.ஆர்.எம் சட்டக் கல்லூரி , சென்னை) பேசுகையில், எளிய மொழிநடையில், கேள்வி பதிலாக தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். 21ம் நூற்றாண்டில் திராவிடர் இயக்கத்துக்கு கிடைத்த ஆவணம் இந்த நூல் என்று வாழ்த்துரை வழங்கினார்....

சிந்தனையை தூண்டும் நூல்!

சிந்தனையை தூண்டும் நூல்!

நீங்கள் நாத்திகரா? இதைப் படிக்க வேண்டாம் என்ற தலைப்பில் அறிவுச் சுடர் வெளியீட்டகம் நூல் ஒன்று வெளியிட்டுள்ளது. நூலின் நோக்கம் விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாத்திகரா? இதைப் படிக்கவேண்டாம் என்று தலைப்பிட்டதன் காரணம் இந்தப் புத்தகத்தின் கேள்விகள் அனைத்தும் உங்களைப் பொருத்த வரையில் பொருத்தமற்றதே. ஆனாலும் புத்தகம் முழுவதையும் படித்துவிட்டீர்களானால் ஒரு கடவுள் நம்பிக்கையாளரிடம் எவ்வாறு விவாதிப்பது அல்லது சிந்தனையைத் தூண்டுவது என்பதற்கு ஒரு வழிகாட்டலாக இருக்கும். அதுபோல மறு வெளியீடுகளில் இதனை மேம்படுத்த நீங்களும் உதவலாம். நூல் விலை: ரூ.50 கிடைக்கும் இடம்: அறிவுச் சுடர் வெளியீட்டகம், திருச்சி பெரியார் முழக்கம் 10072025இதழ்

நூல் வெளியீடு !

நூல் வெளியீடு !

“ஆரிய மாடலா? திராவிட மாடலா?” திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அவர்களின் எழுத்தாக்கத்தில் கருத்து செறிவு மிகுந்த கட்டுரைகள்,வரலாற்று தகவல்கள், நிகழ்கால அரசியல் பார்வைகள்……(கெட்டி அட்டையில்) முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலையில் ரூ.300/- (ரூபாய் முன்னூறு மட்டும்) (தபால் செலவு ரூ.50 தனி) “பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைப் பயணத்தின் போது (மார்ச் 15 முதல் மார்ச் 22 முடிய) முன்பதிவு செய்யப்படும்.முன்பதிவிற்கு அலைபேசி எண் : 94986 56683 – இந்த எண்ணில் GPay செய்து விட்டு வாட்ஸ் அப்பில் முன்பதிவு செய்யவும். பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டில் சிறப்பு வெளியீடாக இந்நூல் வெளியிடப்படுகிறது. முன்பதிவு செய்வோருக்கு மாநாட்டு திடலில் புத்தகங்கள் வழங்கப்படும். நாள் : 22.03.25 சனி நேரம் : மாலை 04.00 மணி இடம் : சின்னக் கடைவீதி, மயிலாடுதுறை. – நிமிர்வோம் வெளியீடு, 15.03.2025

எச்சிலில் உருள்வது யாரால்?

எச்சிலில் உருள்வது யாரால்?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதத்தின்படி மக்களுக்கு பகுத்தறிவூட்டி மானமும் அறிவும் மிக்க சமுதாயமாய் இந்த திராவிட சமுதாயத்தை உலகிலுள்ள பிற சமுதாயங்களுக்கு ஒப்பாக கொண்டு வர தன் வாழ்நாளெல்லாம் உழைத்த தந்தை பெரியாரின் வழியில் இயங்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் கோரிக்கை மனுவை உள்ளடக்கியதே இந்த சிறு வெளியீடு. உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் அவர்களின் மூடத்தனமான திர்ப்பை கேள்விக்குள்ளாக்கி உச்சநீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற கோரிக்கை மனுவும் அதோடு பார்ப்பனர் உண்ட எச்சில் இலையில் உருண்டு புரள்வது புண்ணியம் என்று கட்டமைத்து வைத்திருக்கும் சனாதனத்தை கேள்விக்குள்ளாக்கி மக்களை கண்ணியத்தோடு வாழ வைக்க வேண்டிய முயற்சியின் ஓர் அங்கமே இந்த வெளியீடு. 32 பக்கங்கள், 30 ரூபாய். நிமிர்வோம் வெளியீடு புத்தகம் பெற ஜி பே – வாட்ஸ் அப் 94986 56683 பெரியார் முழக்கம்...

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

எழுத்தாளர் விஜயபாஸ்கர் புதிதாக எழுதியுள்ள “பாலஸ்தீனம் முதல் இஸ்ரேல் வரை – ஒரு வரலாற்றுச் சுருக்கம்” நூலை சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் புக்ஸ்.காம் அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட கருப்புப் பிரதிகள் நீலகண்டன், பத்திரிகையாளர் நீரை.மகேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் விஜயபாஸ்கர் “உயர்ஜாதியினருக்கு EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?” என்ற நூலை தொகுத்து  கவனம் ஈர்த்தவர். நிகழ்வில் அற்புதம்மாள், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ர.பிரகாசு, அன்னூர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

RSS-அய் அச்சுறுத்தும் 5M

RSS-அய் அச்சுறுத்தும் 5M

சங் பரிவார் கும்பல்கள் தங்களது கொள்கை எதிரிகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது இந்நூல். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கு ஒன்றில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசிய உரையுடன், தகவல்கள் சேர்க்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது. சென்னை புத்தகக் காட்சியில் கருஞ்சட்டை பதிப்பகம் அரங்கு எண் 332-இல் இந்நூல் கிடைக்கும். கழக வெளியீடுகள் கிடைக்குமிடம் சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள் அனைத்தும் பெரியார் புக்ஸ்.காம் அரங்கு எண் 88-இல் கிடைக்கும். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம்  மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

சேலம் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரை; சென்னையில் கழகம் நடத்திய தமிழர் திருநாள் விழாவில் நிகழ்த்திய உரைகளை இணைத்து “இது தமிழ்நாடு!” எனும் தலைப்பில் நூலாக கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த மே 7ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நூலையும் மாநாட்டு செய்திகள் அடங்கிய “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழையும் அமைச்சரிடம் நேரில் வழங்கினார். நூல் விலை : ரூ.30/- நூல் தேவைப்படுவோர் கழக தலைமை நிலையத்தை தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண் :  + 91 98416 53200 / +91 8973341377 பெரியார் முழக்கம் 11052023 இதழ்

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கழகம் நடத்தும் 400 தெருமுனைக் கூட்டங்கள், 11 மண்டல மாநாடுகளில் பொது மக்களிடம் பரப்ப கழகத்தின் வெளியீடுகள்…. 1)         பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்(விடுதலை இராசேந்திரன்) – ரூ. 100 2)         மோடி ஆட்சி ‘இந்து’க்களுக்கு என்ன செய்தது? (ர.பிரகாசு) – ரூ. 30 3)         50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ்நாடு (ஜெயரஞ்சன்)         – ரூ. 30 4)         மக்களை குழப்பும் ‘போலி அறிவியல்’(எட்வின் பிரபாகரன்) -ரூ. 60 5)         தில்லை தீட்சதர்கள் – முறைகேடுகள்                 – ரூ.  30 6)         பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்(விடுதலை இராசேந்திரன்)       – ரூ. 60 7)         திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு (1912 முதல் 1973 வரை)      – ரூ. 60 8)         கீழ் வெண்மணியும் பெரியாரும்         – ரூ. 60 9)...

கழகத்தின் புதிய வெளியீடு (1) ‘மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?’

கழகத்தின் புதிய வெளியீடு (1) ‘மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?’

பரப்புரைப் பயணத்துக்கான 15 வெளியீடுகளில் ஒன்று “மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?” பெரியாரியவாதியும் ஊடக வியலாளருமான ர. பிரகாஷ் மிகச் சிறப்பாக ஏராளமான தகவல்கள் தரவுகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மக்களை எப்படி ஏமாற்று கிறார்கள்? ஜி.எஸ்.டி. கொள்கையால் மாநிலங்கள் வருவாய் எப்படி சுரண்டப் படுகின்றன? ஏர் இந்தியா, எல்.அய்.சி. பங்கு விற்பனைக்கு ஒன்றிய ஆட்சி கூறும் மக்களை ஏமாற்றும் போலி வாதங்கள் என்ன? அதில் உண்மை இருக்கிறதா? பொதுத் துறை நிறுவனங்கள் ஏன் தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது? பயனடைவது யார்? எப்படி விதிமீறல்கள் நடக்கின்றன? கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் வரிப்பணம் கொட்டி அழப்படுவதோடு வங்கிகள் கடன்களை வாரி வாரிக் கொடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள். கார்ப்பரேட் சேவைகளுக்காக பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் பரிசுகள்; பரிவர்த்தனைகள் என்ன? ஊழல் எதிர்ப்புக் கட்சியாக காட்டிக் கொள்ள விரும்பும் பா.ஜ.க.வின் போலி முகமூடியைக் கிழித்துக் காட்டும் ‘தேர்தல் பத்திரங்களின்’ கதை!...

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகம் தொடர்ந்து திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளி வந்துள்ள புதிய வெளியீடுகள்: ஆதிப் பெண்ணின் அடிதடி – ஓவியா குறளும் கீதையும் –  அருள்மொழி மற்றும் சுப. வீரபாண்டியன் திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு – வெற்றிச் செல்வன் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் – பெரியார் சரவணன் ஏன், பெரியார் மதங்களின் விரோதி? – வெற்றிச் செல்வன் – உதய குமார் இடைவேளை – சுப. வீரபாண்டியன் (நாவல்) ஆளுமைகள் சாரதாதேவி, குண. சந்திரசேகர், இக்லாஸ் உசேன்.   தொடர்புக்கு : 9840336688 பெரியார் முழக்கம் 03022022 இதழ்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டின் ஆசிரியர் விடுதலை இராசேந்திரன் எழுதிய தலையங்களின் நான்கு தொகுப்புகளும் கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய நய்யாண்டி எழுத்துகள் ஒரு தொகுதியாகவும் 5 தொகுதிகளாக வெளி வந்துள்ளது. பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடந்த நிகழ்வுக்கு தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா. உமாபதி வரவேற் புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில கொள்கை வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் நூல்களை வெளியிட தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி பெற்றுக் கொண்டார். தொகுப்புகள் பற்றி மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சித் தோழர் வாலாஜா வல்லவன் அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் மேடைக்கு வந்து தொகுப்புகளை திராவிடர் விடுதலைக் கழகத்...

நூல் வெளியீட்டு விழாவில் ஆ. ராசா முழக்கம் காவிகளின் இந்துத்துவ அரசியலை முறிக்கும் ஒரே மாமருந்து பெரியார் மட்டுமே!

நூல் வெளியீட்டு விழாவில் ஆ. ராசா முழக்கம் காவிகளின் இந்துத்துவ அரசியலை முறிக்கும் ஒரே மாமருந்து பெரியார் மட்டுமே!

கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், பெரியார் ஒருவர் மட்டுமே நமக்கு வழி காட்டுகிறார். அவரது தத்துவங் களால் மட்டுமே காவி மயமாக்கும் முயற்சியை முறியடிக்க முடியும் என்று குறிப்பிட்டார். நாட்டையே காவி மயமாக்கிட வேண்டும் என்று தீவிரமாக அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வரும் ஒன்றிய ஆட்சியை வீழ்த்த நம்மிடம் உள்ள ஒரே மாமருந்து பெரியார் மட்டும் தான். அம்பேத்கரை கூறலாம் என்றால் அவரையும் ‘இந்துத்துவா’ தனக்குள் இழுத்துக் கொண்டு ‘இந்துத்துவா அம்பேத்கர்’ என்று பேசி வருகிறது. பெரியார் என்ற நெருப்பை மட்டும் தான் அவர்களால் பொட்டலம் கட்ட முடியவில்லை என்று நாடாளு மன்ற உறுப்பினரும் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ. ராசா குறிப்பிட்டார். கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு சென்னை இராஜரத்தினம்  முத்தமிழ்ப் பேரவை அரங்கில் டிச.4, 2021 மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. திராவிடர்...

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

புலியூரில் நடந்த மாவீரர் நாளில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ நூல் வெளி யீட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல் முருகன் வெளியிட கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். ‘நன்செய் பிரசுரம்’ குறைந்த விலையில் ரூ.10/-க்கு நூலை வெளியிட்டுள்ளது. நிகழ்வுக்கு 800 பிரதிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. அனைத்து நூல்களுமே விற்றுத் தீர்ந்து விட்டன. வெளியீட்டாளர் கவிஞர் தம்பி நிகழ்வில் பங்கேற்றார். நூலைப் பெற : 9566331195 / 7373684049 பெரியார் முழக்கம் 02122021 இதழ்

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

சீமான், மணியரசன் நடத்தும் அமைப்புகள், தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் பெரியார் எதிர்ப்பையும் மத அடையாளங்களையும் உயர்த்திப் பிடிப்பதை மறுத்து சென்னையில் தமிழ்த் தேச நடுவம் நடத்திய கருத்தரங்கில் கருத்தாளர்கள் நிகழ்த்திய உரையை கருஞ்சட்டைப் பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறது. திராவிடம் யாருக்கு சொந்தம்? – பேரா. கருணானந்தன், விலை : ரூ.20/- திராவிடத் தமிழ்த் தேசியம் – வாலாஜா வல்லவன், விலை : ரூ.20/- பச்சைத் துரோகம் – ஆழி செந்தில்நாதன், விலை : ரூ.10/- தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்கும் பார்ப்பன கங்காணிகள் – பொழிலன், விலை : ரூ.20/- இது தவிர மேலும் இரு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும் – முனைவர் வெ. சிவப்பிரகாசம், விலை : ரூ.130/- நீங்கள் எந்தப் பக்கம்? – சுப. வீரபாண்டியன், விலை : ரூ.70/- கிடைக்குமிடம் : 120, என்.டி.ஆர். தெரு, ரெங்கராஜன்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. தொடர்புக்கு...