வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு
நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 29வது கூட்டம் அன்பு தனசேகர் (கழக தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் இ.ரா.உமாபதி ஒருங்கிணைத்தார்.
மறைந்த பகுத்தறிவு இயக்குனர் வேலு பிரபாகரன் படத்தைத் திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். நினைவேந்தல் உரையாற்றிய திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கொள்கையில் சமரசமற்ற கடவுள் மறுப்பாளரின் பணிகளையும், வேலு பிரபாகரன் உடன் பயணித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். வேலுபிரபாகரன் இயக்கிய `கடவுள்’ படம் திரையிடப்பட்டது.
நிகழ்வில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), ம.கி.எட்வின் பிரபாகரன்(தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), சேத்துபட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வட சென்னை அமைப்பாளர்), ஆ.வ வேலு (வட சென்னை ஒருங்கிணைப்பாளர்), கோபி(திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), சூர்யா(திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் ஊடக நண்பர்கள் பேரலை இந்திரகுமார், U2brutus மைனர், உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியார்முழக்கம்இதழ்31072025
