தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

சென்னை கழக தலைமை அலுவலகத்தில் ஜூன் 29 மாலை 5 மணி அளவில் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் தொழில்நுட்ப அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இரு அணிகளை சேர்ந்த 40 தோழர்கள் பங்கேற்றனர். சென்னை மாவட்ட இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில், எழுத்தாளர்களை உருவாக்குவது, வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல், தோழமை உணர்வை மேம்படுத்துதல், அறிவியல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. மாதம் ஒரு புத்தக திறனாய்வு கூட்டத்தை இளைஞரணி முன்னெடுக்கும்.

2. மாதம் இரண்டு தெருமுனை கூட்டங்கள் நடத்துவது

3. ஆண்டுக்கு இரண்டு பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக அம்பத்தூர் பகுதியில் பகுத்தறிவு பரப்புரை பிரச்சாரம் நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

தொழில்நுட்ப அணி சார்பில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் தொழிட்நுட்ப் அணி சார்பாக புகைப்படக் கருத்து வடிவ உருவாக்கம், காணொலிப் பிரச்சாரம், இணையதள வடிவமைப்பு, சமூக வலைத்தள செயல்பாடுகள், ஆவணப்படுத்துதல், எண்ணிமப்படுத்தல், ஆங்கில உள்ளடக்கத் தயாரிப்பு, தேதி வாரியாக திராவிடர் இயக்க வரலாற்று நிகழ்வுகளை தொகுத்தல், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அருண் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு.கோபி, தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி, பிரசாந்த் உள்ளிட்ட பலர் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் புதிய தோழர் விஜய்பிரதாபன் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு கழக வெளியீடுகள் வழங்கப்பட்டன.
பெரியார் முழக்கம்03072025இதழ்

You may also like...