இளமதி ஜேசன்‌ ஜாதி மத மறுப்பு மணவிழா

கழக ஆதரவாளர் எம்.ஜி இளங்கோவன் – மாலதி ஆகியோரின்‌ மகள் இ.மா.இளமதி பி பி.ஜேசன் ஆகியோர் ஜாதி மத மறுப்பு மணவிழா 8.02.2025 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை ஈஞ்சம்பாக்கம் அக்கரையில் உள்ள ஜெனராஜன் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மணவிழாவை நடத்தி வைத்தார். கீழ்கண்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இன்று முதல் நாங்கள் வாழ்க்கை துணைவர்களாக குடும்ப வாழ்வில் நுழைகிறோம்.சம உரிமையும் தோழமையும் அன்பும் கொண்டதே குடும்பம் என்றக் கொள்கை வழியில் பயணிக்க உறுதி ஏற்கிறோம்.
வாழ்வில் சந்திக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சமமாக பகிர்ந்து கொண்டு இணையர்களாவும், தோழர்களாகவும் அறிவியல் நெறியில் சமூக அக்கறையோடு வாழ்ந்து காட்டுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.
என்று உறுதி ஏற்றனர். மண விழா மகிழ்வாக இணையர்கள் கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர்
பெரியார் முழக்கம் 06032025இதழ்

You may also like...