வாசகர் கடிதம்
பெரியார்: ஜாதி, தேசியம், சோசலிசம் (Periyar – Caste, Nation & Socialism) ஆங்கில நூல் குறித்த அறிமுகம் சிறப்பாக இருந்தது. பெரியாரியல்வாதி தோழர் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள இந்நூல், வெளியீட்டில் இருந்து தொடர்ச்சியாக இந்நூல் குறித்த விவாதத்தை திராவிடர் விடுதலைக் கழகம் முன்னெடுப்பது இந்நூல் இன்னும் பலரைச் சென்றடைய உதவும். பெரியார் குறித்த அவதூறுகளை மறுத்து ஏற்கெனவே கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் நூல்கள் எழுதியுள்ள நிலையில் அதே பாணியிலான ஆங்கில நூல் வெளிவருவது வரவேற்கத்தக்கது.
திராவிடர் விடுதலைக் கழகம் பயிலரங்கத்தில் தோழர் ஜீவா குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கழகத் தலைவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது. அதையொட்டி ஆரோக்கியமான விவாதத்தை தலைவர் தொடங்கவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இன்றைய தலைமுறை பல்வேறு வரலாற்று தகவல்களையும் தரவுகளையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
-அருண்கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்)
பெரியார் முழக்கம் இதழ் 30102025
