வேலுபிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் 27.07.25 அன்று இயக்குனர் வேலு பிரபாகரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இனமுரசு சத்யராஜ் சிறப்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தபெதிக பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், ப்ளூ சட்டை மாறன், இயக்குனர் கதிர், திக பொருளாளர் வீ.குமரேசன், பாடகர் அந்தோணி தாசன், இயக்குனர் அகரன் உள்ளிட்ட பலரும் இயக்குனர் வேலு பிரபாகரனுடனான தங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இரா. உமாபதி (திவிக சென்னை மாவட்டச் செயலாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) , ம.கி.எட்வின் பிரபாகரன் (தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபி (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் ஒருங்கிணைத்தார்.
பெரியார்முழக்கம்இதழ்07082025

You may also like...