மாணவர்களுக்கு ஆலோசனை மய்யம்,மாணவர் கழகம் முடிவு

சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் (04/05/25) சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு குறளரசி தலைமை தாங்கினார், இளவரசன் முன்னிலை வகித்தார். சூர்யா, ஷர்மிளா, தோழி, பிரசாந்த், பேரன்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.

எடுக்கப்பட்ட முடிவுகள்:

1)கல்லூரி சேர இருக்கும் மாணவ மாணவியருக்கான வழிகாட்டுதல் தருவது.

2)இட ஒதுக்கீடு பற்றிய அறிமுக வகுப்பு இந்த மாதத்தில் நடத்துவது.

3) புதிய இசைக்குழுவை தொடங்குவது.

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக 2025-2026 ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

தனியார் பள்ளிகளில் 25% பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு RTE முலமும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தில் விண்ணப்பித்து தரப்படும்.

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி சேரும் மாணவ மாணவியருக்கான ஆலோசனை மையம். தொடர்புக்கு:

பேரன்பு(சென்னை): 89731-19313, இளவரசன்(சென்னை): 88382-77257
நாகராஜன்(சேலம்): 90929-04626, ஷர்மிளா(ஈரோடு)-75987-04581
நவீன்(கோவை)-63698-18361, ஷியாம் (தஞ்சாவூர்)-90808-18987
பெரியார் முழக்கம் 22052025இதழ்

You may also like...