கழகத்தினர் எடுத்த பெரியார் பிறந்தநாள் விழாக்கள்
கள்ளக்குறிச்சி: மாவட்டக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு நயனார்பாளையத்தில் தந்தை பெரியார் பள்ளியில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 10- மணியளவில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ப.அங்கமுத்து தலைமையில் மாலை அணிவித்து பெரியாரின் சிறப்புகள் குறித்து பேசப்பட்டன.
இந்நிகழ்வில் க.அசன், க,மதியழகன், ஆ.நாகராசன், ந.வெற்றிவேல் ச.வீரப்பாண்டியன், ஜெயனுல்லாபுதீன், சேரன், மைக்கேல், அஜித்குமார், தண்டபாணி உள்ளிட்ட பல தோழர்களும் பள்ளி மாணவர்களும் கருப்பாயி, இலட்சுமி, வாசுகி, கோமதி, அஞ்சுகம், சாரதாமணி உள்ளிட பெண் தோழர்களும் கலந்து கொண்டனர்.
சங்கராபுரதில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 11 மணியளவில் ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 5 மணி அளவில் கடுவனூரில் பெரியார் அம்பேத்கர் திடலில், பெரியார் பிறந்தநாள் மற்றும் தோழர்கள் பெ. கோவிந்தன் கா.கோவிந்தராஜ் சு.தினகரன் செ.விஜய் ஆகிய தோழர்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. க. இராமர் மாவட்டச் செயலாளர் தலைமை வகித்தார்.
மு.நாகராஜ் வரவேற்புரையாற்றினார், சி.ஆசைத்தம்பி, வீ.முருகன் அறிவியல் மன்ற அமைப்பாளர், இரா.இராமச்சந்திரன், இரா.கார்மேகம் ரிசிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர் முன்னிலை வகித்தனர். நா.அய்யனார் தலைமைக் குழு உறுப்பினர் தோழர்களின் படத்தை திறந்துவைத்தார்.
சி.சாமிதுரை மாவட்ட அமைப்பாளர் ந.வெற்றிவேல் மாவட்ட துணைச் செயலாளர் நினைவேந்தல் உரையாற்றினார். மா.குமார் ரிசிவந்தியம் ஒன்றிய தலைவர் நன்றி உரையாற்றினார். கு. பாபா தமிழ்நாடு மாணவர் அணி, ஜீவா, நீதிபதி, கி.ஆனந்தன், மு.குமரேசன், ஏ.ஜெயபிரகாஷ் சா.ஏதுசாமி, கா. கயல், தமிழ்தாசன் துறை, வி.தனுஷ் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். நினைவேந்தல் தோழர்களின், படத்தை குடும்பத்தாருக்கு ந.அய்யனார் தலைமை குழு உறுப்பினர் வழங்கினார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவாக ஞாயிறு (22-09-2025)அன்று நயனார்பாளையம் அருகில் உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில் புதிய தோழர்களான தங்கம், கருப்பாயி, இலட்சுமி தோழர்களின் ஏற்பாட்டில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஆத்தூர் மகேந்திரன் மற்றும் கணபதி தோழர்களின் விழிப்புணர்வு கருத்துரையாடல் நடத்தப்பட்டது. ந.வெற்றிவேல், ஆ.நாகராசன், க.மதியழகன், ஆசிரியர் முருகானந்தம், மைக்கேல்.வி.சி.க, அம்பிகாபதி.வி.சி.க, பாலு.வி.சி.க உள்ளிட தோழர்கள் உரையாற்றினார்கள்.
திருப்பூர்: மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 17 -09 – 25 அன்று காலை 9-30 மணி அளவில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியார் சிலைக்கு கழகப் பொருளாளர் சு.துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கனல் மதி கொள்கை முழக்கங்களை கூற தோழர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்
சிவகாமி ஜாதி ஒழிப்பு உறுதி மொழியினை கூற தொடந்து தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் முகில் இராசு முன்னிலை வகித்தார்.
பாரதி சுப்பராயன் (நவீன மனிதர்கள் குழு தலைவர்), தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் வீ.சிவகாமி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், தெற்குப் பகுதி பொறுப்பாளர் இராமசாமி, மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர்கள் சரசுவதி, முத்து வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், தனகோபால், ஆத்துப்பாளையம் மதன், நவீன மனிதர்கள் குழு லெனின், அருன், காதர் தோழர்கள்: அம்மா காளியம்மாள், சிரிஜா, வசந்தி யமுனா, இனியன், ஹரிசு, சங்கவி, ரூப, கார்திக், கருணா நீதி இராஜ்குமார், கனபதி பெரியார் பிஞ்சு: தழல் சிறகன், வெற்றி மாறன், மகிழ் மாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னை: சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு, மாவட்டக் கழகம் சார்பில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், கழக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் இராவணன் , அ.வ. வேலு , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அருண் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்று கொள்கை முழக்கமிட்டு, சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
* காலை 7 மணிக்கு, நங்கநல்லூர் பகுதிக் கழகத்தின் சார்பில், நங்கநல்லூரில் உள்ள 2 பெரியார் சிலைகளுக்கும் – அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து, தோழர்கள் கொள்கை முழக்கமிட்டு, சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வை திவிக தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைத்தார்.
நகர அமைப்பாளர் அருண் கோமதி, பிரீத்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்று, பெரியாரின் பிறந்தநாளை கொள்கைநாளாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். வேளச்சேரியைச் சேர்ந்த குருபிரசாத் என்ற இளைஞர் இயக்கத்தில் இணைந்து கொண்டார். —————————————————————————————————————- சட்டப் பல்கலைக்கழகத்தில் சமூகநீதி நாள் உரையாடல்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் 147-வது பிறந்தநாள் “சமூகநீதி நாளை” முன்னிட்டு 17.09.25 அன்று தந்தைப் பெரியாரின் உருவப் படம் வைத்து பெரியாரின் சமூகநீதி, பெண்விடுதலை கொள்கைகளை பற்றி மாணவருடன் உரையாடல் நடைபெற்றது.
மாணவர்கள் பெரியாரின் கொள்கைகளை முழக்கமிட்டும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கியும் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடியதோடு நிறைவாக சமூகநீதி நாள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
—————————————————————————————————————
தஞ்சாவூர்: பேராவூரணி பெரியார் சிலைக்கு தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் தலைமையில் ஒன்றியச் செயலாளர் உதயகுமார், தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் அறிவிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பேராவூர் நகர அமைப்பாளர் தா.கலைச்செல்வன் மாலை அணிவித்தார். திக சார்பில் மாவட்டச் செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், மதிமுக நகரச் செயலாளர் குமார், அஇதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன், காங்கிரஸ் நகரச் செயலாளர் பொன் நடராஜன், சிபிஅய் ஒன்றிய செயலாளர் வீரமணி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ் வேலுச்சாமி, தமிழ்வழி கல்வி இயக்கம் பழனிவேல், அறநெறி மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஆயர்ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு நீலகண்டன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திக பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், கழக மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம், நகரச் செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் கொள்கை முழக்கமிட்டனர். அனைத்து கட்சியின் சார்பில் பொறுப்பாளர்களும், தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் 147 பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.
* முடச்சிக்காடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அறநெறி மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஆயர் ஜேம்ஸ், மரக்காவலசை பெரியசாமி இல்லத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 09102025
