பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்? தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!
சென்னை: 18/3/25 செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், உத்திரமேரூர் பேருந்து நிலையம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம், செய்யாறு – ஆரணி கூட்டுச் சாலை ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கருத்துரையாற்றிய தோழர்கள்: இரா. உமாபதி, ரவிபாரதி, சுகுமார், ம.கி. எட்வின் பிரபாகரன், காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு), அருண் கோமதி, திலகவதி (மக்கள் அதிகாரம்) ஆகியோர்.
பொன்ராஜ் – வீரமணி – கார்மேகம் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அமீன் (தமுமுக), அ.வெ.முரளி (திக), ஆதித்ய கரிகாலன் ஆகியோர் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆதித்ய கரிகாலன் தங்கும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார்.
சுகுமாறன், குமார், சூர்யா, கோபி, இரண்யா, வீரா, அசோக், முரளி, அருண் கோமதி, அருண் (இளைஞரணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
19/3/25 மதுராந்தகம் பேருந்து நிலையம், சோத்துப்பாக்கம் சந்திப்பு, திண்டிவனம் காந்தி சிலை, மயிலம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சென்னை அணியின் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கருத்துரையாற்றிய தோழர்கள்: இரா. உமாபதி, பெரியார் சாக்ரடீஸ், பிரபா கல்வி மணி (பழங்குடியினர் இருளர் பாதுகாப்பு சங்கம்), ம.கி. எட்வின் பிரபாகரன், அருண் கோமதி, மாயவன் (நடுநாட்டு இலக்கியம்) ஆகியோர்.
பொன்ராஜ் – வீரமணி – கார்மேகம் – குபேந்திரன் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதித்ய கரிகாலன், தெள்ளமிழ்து, திருமா சுந்தர் (விசிக), பூபால் (விசிக), பிரபா தண்டபாணி (திமுக) ஆகியோர் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பெரியார் சாக்ரடீஸ், பிரபா தண்டபாணி (திமுக) ஆகியோர் தங்கும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார்.
புத்தக விற்பனை – 2,240. பெரும்பாலான நூல்களை வாங்கியவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காவலர் “நான் ஒரு பெரியார் வெறியன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியாக உள்ள நூல்களை மட்டும் கேட்டறிந்து வாங்கிச் சென்றார்.
சுகுமாறன், குமார், சூர்யா, கோபி, இரண்யா, வீரா, அசோக், முரளி, அருண் கோமதி, அருண் (இளைஞரணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
20/3/25 விழுப்புரம் பேருந்து நிலையம், விக்கிரவாண்டி பேருந்து நிலையம்
அரசூர் கூட்டுச் சாலை, பண்ருட்டி jkr ஜவுளி கடை அருகில் ,நெய்வேலி NLC Gate arch ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடைபெற்றன.
கருத்துரையாற்றிய தோழர்கள்: கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இரா. உமாபதி, பெரியார் சாக்ரடீஸ், ம.கி. எட்வின் பிரபாகரன், ஜீவானந்தம் (திமுக), நைனார் முகமது (திமுக), அருண் கோமதி, நெய்வேலி வெங்கடேஷ் (திமுக) ஆகியோர்.
பொன்ராஜ் – வீரமணி – கார்மேகம் – குபேந்திரன் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கனிமொழி – பிருத்விராஜ் – பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் ஆகியோர் பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். பிரபா தண்டபாணி (திமுக), சந்திரசேகர் (திமுக), பாலு ஆகியோர் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கடலூர் சிவகுமார், பாலு ஆகியோர் தங்கும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். அம்பேத்கர் என்ற இளைஞர், கழகத்தில் இணைந்து கொண்டார்.
சுகுமாறன், குமார், சூர்யா, கோபி ,இரண்யா, வீரா, அசோக், முரளி, அருண் கோமதி, அருண் (இளைஞரணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
21/3/25: அரியாங்குப்பம் மார்கெட், அரியாங்குப்பம், முதலியார் பேட்டை
ஒதியன் சாலை அண்ணா சிலை, Bussy தெரு, பிள்ளைத் தோட்டம் பெரியார் சிலை ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடைபெற்றன.
கருத்துரையாற்றிய தோழர்கள்: லோகு. ஐயப்பன், இரா. உமாபதி, இளங்கோ (தபெதிக), மங்கையர் செல்வன் (தமிழ் மீனவர் விடுதலை வேங்கை), சுகுமார் (மக்கள் உரிமை கூட்டமைப்பு), அருண் கோமதி, அழகர் (தமிழர் களம்), பஷீர் (Be Bold) ஆகியோர்.
பொன்ராஜ் – வீரமணி – கார்மேகம் – குபேந்திரன் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் பகுத்தறிவுப் பாடல்களை பாடினார். மாறன், லோகு அய்யப்பன் ஆகியோர் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தோழர் லோகு அய்யப்பன் தங்கும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார்.
சுகுமாறன், குமார், சூர்யா, கோபி, இரண்யா, வீரா, அசோக், முரளி, அருண் கோமதி, அருண் (இளைஞரணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
22/03/2025 கடலூர் பேருந்து நிலையம், பரங்கிப்பேட்டையிலும் பரப்புரைப் பயண விளக்க கூட்டம் நடைபெற்றது. கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் துண்டறிக்கை கொடுக்கச் சென்ற கழகப் பெண் தோழரிடம் அநாகரிகமான முறையில் ஆபாச சொற்களைப் பேசினார். காவல்துறை எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது. காவல்துறையினர் கழகத் தோழர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டனர். ஆனாலும் இந்த சலசலப்புக்கு அஞ்சாமல் கருஞ்சட்டைத் தோழர்கள் உற்சாகத்துடனும் மிகவும் எழுச்சியுடனும் பரப்புரையைத் தொடர்ந்தனர்.
பெரியார் பிஞ்சு மகிழன் மற்றும் கார்மேகம்- பொன்ராஜ் கலைக்குழுவினர் பறையிசை மற்றும் பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். உமாபதி, சென்னை மாவட்டச் செயலாளர், திவிக, இள.புகழேந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில தேர்தல் பணிக்குழுச் செயலர், திமுக, சதீஷ், திவிக கடலூர், மங்கையர் செல்வம், நிறுவனத் தலைவர் தமிழ் மீனவர் விடுதலை வேங்கை அமைப்பு ஆகியோர் சீமானின் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி 2 மணி நேரம் சிறப்பாக உரையாற்றினார்கள்.
சுகுமாறன், குமார், சூர்யா, கோபி ,இரண்யா , வீரா, அசோக், முரளி, திருப்பூர் பிரசாந்த், அருண் கோமதி, அருண் (இளைஞரணி), அருண் (ஆட்டோ) ஆகியோர் துண்டறிக்கை மற்றும் புத்தக விறப்பனை செய்து கடை வசூலிலும் ஈடுபட்டனர்.
பெரியார் முழக்கம் 17042025இதழ்
