களம் இறங்கிறது சென்னை இளைஞரணி!

சென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பாக “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள் என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, செப்டம்பர்-17 தேதி வரை தொடர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், சைதாப்பேட்டை, தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர் நகர், அம்பத்தூர், அமைந்தகரை, வேளச்சேரி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. 10 நாட்கள் தினமும் மாலை 5 மணியளவில் தெருமுனைக் கூடட்ங்கள் நடைபெறும்.

தெருமுனைக் கூட்டங்களில் கழகத் தோழர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் கருத்துரை ஆற்ற உள்ளனர். செப்-17 நிறைவு பொதுக் கூட்டம் இராயப்பேட்டை பெரியார் படிப்பகம் அருகில் நடைபெறும்.

இளைஞர்களே ஜாதியை தகர்த்தெறிவோம்!
சமத்துவ சமுதாயம் படைப்போம் வாரீர்!

You may also like...