சென்னையில் வெற்றிநடை போட்ட ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!
மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம் என்ற தலைப்பில் கழக இளைஞரணி ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை செய்து வருகிறது. சென்னை, சேலம் மாவட்ட இளைஞரணி தோழர்கள் ஆர்வமுடன் இந்த பரப்புரைகளை நடத்தி வருகிறார்கள். சென்னையில் கடந்த 10 நாட்கள் தொடர் பரப்புரை தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. மிக நேர்த்தியாக சென்னை மாவட்டக் கழக இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ப.அருண் மற்றும் எட்வின் பிரபாகரன் இருவரும் இணைந்து பேச்சாளர்கள் மற்றும் இடங்களை தேர்வு செய்தனர். குறிப்பாக தோழமை இயக்கத் தோழர்கள், ஊடவியலாளர்கள் என பலர் சிறப்புரையாற்றினார்கள்.
கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள் சிலர் இந்த கூட்டங்களை தலைமையேற்று நடத்தினார்கள். இளைய தலைமுறையினரிடம் வெகுவாக இந்த கூட்டம் கவனிக்கப்பட்டது. அனைத்து தெருமுனைக் கூட்டங்களும் சென்னை மாவட்டக் கழக முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அருவி வலையொலியில் வீடியோ வெளிவந்துள்ளது. 10 நாட்களும் பாடல்கள் வழியாக, அரசியல் நையாண்டி வழியாக, பறை இசை வழியாக பொதுமக்களை கவரும் விதமான கலைவடிவில் ஜாதி எதிர்ப்பு பரப்புரைக்கு வலுசேர்க்கும் விதமாக தோழர்கள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தோழர்கள் வீரமணி, பொன்ராஜ், பேரன்பு ஆகியோர் அவர்களே எழுதி அவர்களே இசையமத்த ஜாதி ஒழிப்பு பாடல்கள் ஒப்பாரி, ராப் வடிவில் பல புதிய கோணத்தில் கருத்துச் செறிவுடன் பாடல்கள் பாடினர்.
தெருமுனைக்கூட்டங்களின் தொகுப்பு:
முதல் நாள்: தாம்பரம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இளைஞரணியின் ஜாதி எதிர்ப்பு பிரச்சாரம் செப்-1 மாலை 5 மணிக்கு, தாம்பரம் சண்முகம் சாலையில் ச.சா. நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
ஜாஹிர் உசேன் (மமக மாவட்டத் தலைவர்), ப. சாமுவேல் (விசிக தாம்பரம் மாவட்டச் செயலாளர்), தா. கிருஷ்ணா (சிபிஎம் தாம்பரம் தொகுதிச் செயலாளர்), அருண் கோமதி (திவிக தாம்பரம் நகர அமைப்பாளர்), துரை மணிவண்ணன் (மதிமுக பகுதிச் செயலாளர்), சலீம் கான் (மமக காஞ்சி மாவட்டத் தலைவர்), பேரன்பு(சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
தோழர்கள் வீரமணி, பேரன்பு, பொன்ராஜ் ஆகியோரின் பாடல்கள் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. துரை மணிவண்ணன் இரவு உணவு ஏற்பாடு செய்துகொடுத்தார்.
2வது நாள்: ஆய்வரங்கத்தைப் போல நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம்! மீண்டும் முத்திரை பதித்த பல்லாவரம்!!
செப்-2 அன்று மாலை 5 மணிக்கு, பல்லாவரம் ரங்கநாத தெருவில், சுபாஷ் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), கொ.கா. சரவணன் (விசிக பல்லாவரம் மாவட்ட அமைப்பாளர்), முகமது நயினார் (மமக மனித உரிமை அணியின் மாநிலத் துணைச்செயலாளர்), சீராளன் (புஇமு தாம்பரம் மாநகரத் தலைவர்), கார்த்தி (சிபிஅய் காஞ்சிபுரம் மாவட்டத் துணைச்செயலாளர்), தமிழ்வாணன் (புஇமு தாம்பரம் மாநகரச் செயலாளர்), தாமோதரன் (சிபிஎம் பல்லாவரம் பகுதிச் செயலாளர்) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
தோழர்கள் வீரமணி, பேரன்பு, பொன்ராஜ் ஆகியோரின் பாடல்களும் நாடகமும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. தோழர் தர்மராஜ் உணவு ஏற்பாடு செய்தார். பல்லாவரம் கூட்டத்தில், மக்கள் ஆர்வமாக கழக நூல்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. விசிக மாவட்டத் துணை அமைபாளர் மை.பா.மணிவண்ணன் உள்ளிட்ட தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
3வது நாள்: மக்களின் பெரும் ஆதரவுடன் பிரச்சாரக் கூட்டம் செப்-3 அன்று மாலை 5 மணிக்கு, ஜாஃபர்கான் பேட்டை கங்கையம்மன் கோயில் தெருவில், சைதை சிவா தலைமையில் நடைபெற்றது.
திவிக சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, விசிக சைதை தொகுதி துணைச் செயலாளர் பாண்டுரங்கன், சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி (சிபிஎம்) மாவட்டத் தலைவர் ச.லெனின், அ. அறிவுமதி (திவிக) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தோழர்கள் வீரமணி, பேரன்பு, பொன்ராஜ் ஆகியோரின் பாடல்களும் நாடகமும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. தோழர் சாதிக், உணவு ஏற்பாடு செய்துகொடுத்தார். மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் P. சுப்பிரமணி, தோழர்களுக்கு தேநீர் வழங்கினார். பொதுநல வழக்கறிஞர் சக்திவேல் உள்ளிட்ட பல கழகத் தோழர்களும், தோழமை இயக்க பொறுப்பாளர்களும் பங்கேற்று ஜாதி ஒழிப்பில் ஒன்றுபட்டு செயல்பட உறுதியேற்றனர்.
4வது நாள்: ஆணவப்படுகொலை எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டம், செப்-4 அன்று மாலை 5 மணிக்கு, தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில், அ. அறிவுமதி தலைமையில் நடைபெற்றது.
திவிக சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, விசிக தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் கரிகால்வளவன், நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ர. பிரகாசு, ததேமமு ஒருங்கிணைப்பாளர் செந்தில், புரட்சிப் பெரியார் முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், பா.ச. பாலசிங் (WPA சவுந்தரபாண்டியனார் பேரவை) ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர்கள் வீரமணி, பேரன்பு ஆகியோரின் பாடல்களும், தோழர்கள் உமாபதி – பொன்ராஜ் குழுவினரின் நையாண்டி நிகழ்ச்சியும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் அவர்களின் சகோதரர் கண்ணன் ஆகியோர் உணவு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பார்வையாளராக பங்கேற்றார்.
5வது நாள்: செப்-5 அன்று மாலை 5 மணிக்கு, எம்ஜிஆர் நகர் சந்தையில், துரைராசு தலைமையில் நடைபெற்றது. திவிக சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். விசிக தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் கரிகால்வளவன் U2BRUTUS மைனர், தேன்மொழி (திவிக சென்னை IT WING), இம்மேனுவல் துரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர்கள் வீரமணி, பேரன்பு,பொன்ராஜ், சிபி-அபி ஆகியோரின் பாடல்களை பொதுமக்கள் ரசித்துக் கேட்டனர். தோழர் துரை ராசு உணவு ஏற்பாடு செய்திருந்தார்.
6வது நாள்: அம்பத்தூரில் தடம்பதித்த கழகம்! அம்பத்தூரில் முதல் முறையாக திராவிடர் விடுதலைக் கழகம் தெருமுனைக் கூட்டத்தை நடத்தியது. வலதுசாரிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியில் கழகம் ஜாதி எதிர்ப்பு பரப்புரையை சிறப்பாக நடத்திமுடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிதாக இணைந்த தோழர்கள் ஆர்வமுடன் இந்த பகுதியில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
செப்-6 அன்று மாலை 5 மணிக்கு, அம்பத்தூர் பஜார் தெருவில் (வடசென்னை), சதீஷ் கண்ணன் தலைமையில், பிரனேஷ் முன்னிலையில் நடைபெற்றது. திவிக தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
மதிமுக செய்தித் தொடர்பாளர் ஆவடி அந்தரிதாஸ், விசிக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் தேவஞான முதல்வன், விசிக அம்பத்தூர் தொகுதிச் செயலாளர் ஏ.பி. இப்ராகிம், சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, இம்மானுவல் துரை, லீலாவதி (ஊடகவியலாளர்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர்கள் வீரமணி, பேரன்பு, பொன்ராஜ், சிபி – அபி ஆகியோரின் பாடல்களைக் கேட்டு பொதுமக்களின் கவனம் மேடையை நோக்கி நகர்ந்தது. திமுக 82வது வட்டப் பொறுப்பாளர் சிவா உணவு ஏற்பாடு செய்திருந்தார்.
7வது நாள்: செப்-8 அன்று மாலை 5 மணிக்கு, அமைந்தகரை அம்மன் கோயில் தெருவில் இளவரசன் தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. திவிக தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், விசிக மய்யசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பா. வேலுமணி, ஆய்வாளர் தமிழ் காமராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தோழர்கள் வீரமணி, பொன்ராஜ் ஆகியோரின் ஆணவக்கொலை பற்றிய ஒப்பாரிப் பாடல், மக்களை உணர்ச்சிவசப்பட வைத்தது. திவிக வடசென்னை மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி உணவு ஏற்பாடு செய்திருந்தார்.
8வது நாள்: செப்-9 மாலை 5 மணிக்கு, வேளச்சேரி காந்தி சாலையில், இம்மானுவல் துரை தலைமையில் நடைபெற்றது. திவிக தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
திவிக சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை மாநகராட்சி மாமன்ற திமுக பொருளாளர் பெ. மணிமாறன் MC, ஊடகவியலாளர்கள் இந்திரகுமார் தேரடி, மு.க. தினேஷ் குமார் , விசிக தென்சென்னை தெற்கு மாவட்ட செய்தித் தொடர்பாளர் ப. வளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் புருஷோத் அப்பு உருவாக்கிய “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்று பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசுகளை சிறப்பு அழைப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
தோழர்கள் பொன்ராஜ், வீரமணி, பேரன்பு குழுவினரின் ஆணவக்கொலை பற்றிய ஒப்பாரிப் பாடல், மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. திமுக கவுன்சிலர் பெ. மணிமாறன், ம.கி. எட்வின் பிரபாகரன் ஆகியோர் உணவு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர். திவிக தலைமைக்குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், திக மாவட்ட பொறுப்பாளர்கள் பாண்டு, ஜெயராமன், AISCST வங்கி ஊழியர் சங்க பொறுப்பாளர் ஆனந்தராஜ் மதிமுக தோழர்கள் ஏழுமலை, பார்த்திபன் உள்ளிட்ட பல கழகத் தோழர்களும், தோழமை இயக்கப் பொறுப்பாளர்களும் பங்கேற்ற நிகழ்வு எழுச்சியோடு நடைபெற்றது.
9வது நாள்: செப்-10 மாலை 5 மணிக்கு, தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில், த. எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, பேச்சாளர் மகிழவன், தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி, தமிழ்நாடு மாணவர் கழகம் பேரன்பு, தேன்மொழி (IT WING) ஆகியோர் உரையாற்றினர்.
தோழர்கள் பொன்ராஜ், வீரமணி, பேரன்பு குழுவினரின் ஆணவக்கொலை பற்றிய ஒப்பாரிப் பாடல், மக்களிடம் அதிர்வலைகளை உருவாக்கியது.
தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென்சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் இராவணன், சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி, மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, வடசென்னை மாவட்டத் துணைச்செயலாளர் ஆ.வ.வேலு, திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபி, திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் ராஜேஷ், திருவல்லிக்கேணி பகுதித் அமைப்பாளர் த.நா.சூர்யா, மற்றும் கழகத் தோழர்கள் யாழினி, ஷர்மிளா (மாணவர் கழகம்), ஓவியா, தேன்மொழி, அருள்தாஸ், ராஜன், தினகரன், சிகாமணி , கார்த்தி ராஜேந்திரன், ஏசு குமார், சுகுமார், மயிலை குமார், வீரமுத்து, அசோக் ஆகியோர் 9 நாட்களும் கலந்து கொண்டு கடைவீதி பிரச்சாரம், கழக வெளியீடுகளை விற்பனை செய்தல், துண்டறிக்கைகள் கொடுத்தல் போன்ற களப்பணிகளை செய்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 25092025
