“கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி” நூல் வெளியீடு!
தாய் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் டேவிட் பெரியார் தலைமையில் “கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி” நூல் சென்னை வடபழனியில் 26.07.25 அன்று வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகள் நடத்திய தரைவழித் தாக்குதல் பற்றி விவரிக்கிறது இந்நூல். லோகு அய்யப்பன் (புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்), மல்லை சத்யா, இயக்குனர் அமீர், தமிழ் சாக்ரடீஸ், ஊடகவியலாளர் இந்திரகுமார், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, இளைய கம்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இரவி பாரதி (காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்) தொகுத்து வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.
தோழர் தியாகு சிறப்புப் பிரதியினை பெற்றுக் கொண்டார். தோழமை அமைப்புத் தோழர்கள் மனிதி செல்வி உட்பட பலர் கலந்து கொண்டு நூலை வாங்கி சென்றனர். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் தபசிகுமரன் (தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்), இ.ரா.உமாபதி (மாவட்டச் செயலாளர்), எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), இராவணன் (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்), வேலு (வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர்), கடலூர் சிவக்குமார், பேரன்பு (மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரியார்முழக்கம்இதழ்31072025
