வடசென்னையில் கழக கலந்துரையாடல் கூட்டம்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் வடசென்னை கலந்துரையாடல் கூட்டம் 13.07.25 ஞாயிறு அன்று மாலை 06.30 மணியளவில் சென்னை அயனாவரத்தில் உள்ள சேத்துப்பட்டு இராஜேந்திரன் இல்லத்தில் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் புதிய தோழர்களை சேர்ப்பது வட சென்னையில் கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் தெருமுனை, பரப்புரை கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு வடசென்னை மாவட்டம் சார்பில் 100 உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தோழர்கள் ராஜன், தினகரன், சிகாமணி, கழகப் பணிகளை முன்னெடுப்பதை குறித்து கருத்துக்களை தெரிவித்தனர்.
தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, திருவல்லிக்கேணி பகுதி தலைவர் கோபி, திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 17072025இதழ்
