கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

தோழர்‌ பத்ரி நாராயணன் நினைவு நாளில்”கற்போம்! களம்
காண்போம்!” என்ற தலைப்பில் 30/04/25 அன்று சென்னை இராயப்பேட்டை
விஜய் திருமண மண்டபத்தில், கழக இளைஞரணியின் மாவட்ட
அமைப்பாளர் ப.அருண் தலைமையில் பயிலரங்கம் நடைபெற்றது.
பயிலரங்க ஏற்பாடுகளை கழக இளைஞரணி தோழர்கள் நேர்த்தியாக
செய்திருந்தனர். பயிற்சி பெற்ற 55 பேரில் 15 க்கு மேற்பட்டவர்கள்‌
பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்க வரலாற்றில்
இடம்பெற்ற தலைவர்களின் படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்
அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. கழகத்தலைவர் தனது
தொடக்க உரையில் சுயமரியாதை இயக்கத்துக்கும் திராவிட
இயக்கத்துக்கும் உள்ள பண்பு ரீதியான வேறுபாடுகளை சுட்டிக்காட்டி

இயக்க வரலாறுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல
வேண்டிய தேவையை வற்புறுத்தினார்.
நிறைவுரை ஆற்றிய விடுதலை இராசேந்திரன் கழகத் தோழர்கள் எழுப்பிய
வினாக்களுக்கு விளக்கமான விடையளித்தார். கருத்துரையாற்றிய
அனைவருக்கும் கழக வெளியீடுகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.
“கொள்கை தரும் இன்ப வாழ்வு!” எனும் தலைப்பில் மாவட்டச் செயலாளர்
இரா.உமாபதி, “கழகமாவோம்! களம் காண்போம்!!” எனும் தலைப்பில்
நிமிர்வோம் வாசகர் வட்ட அமைப்பாளர் ர.பிரகாசு, “கைபர் போலன் முதல்
கவுதம புத்தர் வரை” எனும் தலைப்பில் கழகப் பேச்சாளர் திருப்பூர்
மகிழவன்,”சீரழிக்கும் பாஜக! சீர்திருத்தும் தமிழ்நாடு!!” எனும் தலைப்பில்
திமுக மாநில செய்தி தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா
கிருஷ்ணமூர்த்தி, “சமூக வலைத்தளங்களில் ஜாதியவாதமும் மதவாதமும்”
எனும் தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, “ஜாதி ஒழிப்பில்
அய்யாவும் அண்ணலும்” எனும் தலைப்பில் திவிக இளைஞரணி மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர்.
தோழர் வீரமணி குழுவினர் பாடல்களை பாடினர். திணைநில வாசிகள்,
“அசுர கீதம்” நாடகத்தை நடத்தினர். இடஒதுக்கீடு குறித்த திமுக
இளைஞரணியினர் உருவாக்கிய காணொளியும், கொளத்தூர் கபிலன்
ஸ்டுடியோ இளவரசன் மற்றும் ர.பிரகாசு எழுதி உருவாக்கிய கழக
வரலாற்றை விளக்கும் காணொளியும் திரையிடப்பட்டது. தமிழ்நாடு
மாணவர் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, இப்பயிலரங்கை
தொகுத்து வழங்கினார்.
70-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். கழகத்தில் புகழேந்தி
சிரிலேகா இணையர்கள் குடும்பத்தோடு கழகத்தில் இணைந்தனர். ஹர்சா
என்ற இளைஞர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். கலந்து
கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிலரங்கத்துக்கு முன்னதாக நம்மையெல்லாம் இயக்கமாக்கிய தோழர்
பத்ரி நாராயணன் 21வது நினைவு நாளையொட்டி, 30/04/25 அன்று காலை
8:30 மணிக்கு, சென்னை மயிலாப்பூரில் உள்ள தோழரின் நினைவிடத்தில்,

சென்னை மாவட்டச் செயலாளர் இரா‌.உமாபதி தலைமையில் மலரஞ்சலி
செலுத்தப்பட்டது. கழக தலைவர் கொளத்தூர் மணி, திமுக மாவட்ட
துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, விசிக மைய சென்னை மாவட்டச்
செயலாளர் சாரநாத், வழக்கறிஞர் திருமூர்த்தி, திமுக கவுன்சிலர் வே
கமலா செழியன், திமுக வட்டச் செயலாளர் மோகன், அஇஅதிமுக வட்டச்
செயலாளர் செல்வம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில்
கலந்து கொண்டனர். தோழர் வீரமணி, பத்ரி குறித்த பாடலை அவர்
நினைவாகப் பாடினார்.
பெரியார் முழக்கம் 08052025இதழ்

You may also like...