நிமிர்வோம் வாசகர் வட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 28வது கூட்டம் தோழர் சிரிஜன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார். மறைந்த கழகத் தோழர் கன்னியப்பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வும் நடைபெற்றது.
அரசியலாக்கப்படுகிறதா நீதித்துறை? என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். ‘அம்பேத்கரின் முகவுரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ரகசிய வரலாறு’ என்ற நூலை எட்வின் பிரபாகரன் திறனாய்வு செய்தார். பேராசிரியர் சுப்பிரமணியின் ‘இதழியல் களத்தில் பெரியார்- ஆய்வும் தொகுப்பும்’ நூலை ர.பிரகாசு திறனாய்வு செய்தார். நிகழ்வில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 17072025இதழ்

You may also like...