“பெரியாரிஸ்ட்” தமிழ்செல்வி இல்லத்தில் படத்திறப்பு
17/9/25 – சென்னை அன்று கொளத்தூர் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் பகுதியில் வசிக்கும் தோழர் தமிழ்ச்செல்வி இல்லத்தில் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் இல்லத்தில் பதிக்கப்பட்டு இருக்கும் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து திறந்து வைத்தார் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்.
கட்டுமான தொழிலதிபரான தோழர் தமிழ்செல்வி, தலித் மற்றும் இஸ்லாமியர்கள், அசைவ உணவு சாப்பிடுவோர்க்கு வீடு வழங்குவதில் முன்னுரிமையும் விலைச் சலுகைகளையும் தந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. U2 BRUTUS ஞான சத்யா, தமிழ்ச் செல்வி ஆகியோர் உரையாற்றினர். சமூகநீதி நாள் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. திவிக சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கினார்.
பெரியார் முழக்கம் இதழ் 25092025
