“மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்!”

சமூகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஜாதியப் படுகொலைகளை (ஆணவ கொலைகள்) தடுக்க சட்டம் மட்டும் போதாது மக்களின் மன உணர்வுகளில் இருந்து அதை நீக்க வேண்டும்.

நாகரீக சமூகமாக இந்த தமிழ் சமுதாயத்தை மாற்றி அமைக்கப் போராடியவர் பெரியார். அவர் தொடங்கிய இயக்கம் தொடர்ந்து ஜாதி எதிர்ப்பு, சடங்கு மறுப்பு கருத்தியலை வலிமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அதன் விளைவாக இன்று பல்வேறு மாற்றங்கள் வந்து இருக்கின்றன.

தமிழ்நாட்டில் யாரும் பெயருக்குப் பின்னால் ஜாதி போடும் வழக்கத்தைப் பின்பற்றுவது இல்லை. ஆகவே அதன் தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு தலைப்புகளில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களை கள ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து SC/ST ஆணையத்திடம் மனு அளித்தது. தற்போது இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்து உள்ளது.

ஜாதிவெறி சிந்தனைகளில் இருந்து இளைஞர்களை மீட்க சென்னை மாவட்டக் கழகம் “மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்!” என்ற தலைப்பில் தொடர் தெருமுனைக் கூட்டங்களை அமைப்பு தொடங்கிய நாளான ஆகஸ்டு-12ம் தேதி முதல் நடத்தவுள்ளது.
பெரியார்முழக்கம்இதழ்31072025

You may also like...