20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகை
கழக செயல் வீரர்கள் கண்ணன் மற்றும் குமார் இருவரையும் விபத்தில் கழகம் பறிகொடுத்தது. பெரியார் நினைவு நாள் சுவரொட்டிகளை ஒட்ட சென்றபோது களப்பணியில் அந்த தோழர்கள் உயிரிழத்தார்கள். உயிர் நீத்த டிசம்பர் 2005 ஆண்டு 24ம் நாள் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சுவரொட்டி அடித்து அவரது நினைவைப் போற்றி வருகிறது. இவர்களுக்கான காப்பீட்டுத் தொகைக்கான வழக்கு 20 ஆண்டு காலத்திற்கு மேல் நடந்தது. இப்போது அந்த தீர்ப்பு தோழர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பெரியார் நினைவு நாள் சுவரொட்டி சென்றபோது அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று மோதி தோழர்களின் உயிரைப் பறித்தது. இதற்காக காப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை வழக்கறிஞர் குமாரதேவன் நடத்தினார். நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வழக்கு நிலுவையிலே இருந்தது. பிறகு முதலமைச்சர் தனிப் பிரிவில் மனு தரப்பட்டு முடங்கிக் கிடந்த வழக்குக்கு உயிரூட்டப்பட்டது. நீதிமன்றம் மறைந்த தோழர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தபெதிக தலைவர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோரை கண்ணன் மற்றும் குமார் ஆகிய தோழர்களின் தாயார்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். வழக்கில் இறுதிவரை குடும்பத்தினருடன் உடன் நின்று வழிநடத்திய கழகத் தோழர் பிரகாஷ் (மாஸ்டர்) அவர்களைக் கழகப் பொதுச் செயலாளர் மனம் திறந்து பாராட்டினார்.
பெரியார்முழக்கம்இதழ்31072025
