பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக்கூட்டம்
பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக் கூட்டம் 22.02.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகரத் தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் கிருட்டிணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன், ச.மாதவன், லோகநாயகி, தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நவீன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
சு.செ.சம்பத் (மதிமுக), இராமதாஸ் (விசிக), சாந்தகுமார் (தோழர் அறக்கட்டளை), இராவணன் (ஆதித்தமிழர் பேரவை), சித்ரா (மாமன்ற உறுப்பினர்), ஈஸ்வரன் (திமுக) உள்ளிட்ட தோழமை இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கழகத் தோழர்கள் ஸ்டாலின் ராஜா, அன்னூர் விஷ்ணு ஆகியோர் கழக வெளியீடுகளை வழங்கி சிறப்பித்தனர். கூட்டத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.
பெரியார் முழக்கம் 27022025 இதழ்
