57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

மயிலாப்பூரில் கழகத் தலைமை அலுவலகத்தில் 18.11.2025 அன்று சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமையில் சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தோழர் இரண்யா கடவுள் மறுப்பு உறுதிமொழியை வாசித்தார். கடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இருந்து தற்போது வரை 57 நிகழ்ச்சிகளை சென்னை மாவட்டக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்றிருக்கிறது. கடந்த ஜூன் முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளின் பட்டியலை தோழர் உமாபதி வாசித்தார்.
திமுக இளைஞர் அணி நடத்திய அறிவுத் திருவிழாவில் கழக வெளியீடுகள் ரூ. 81980 விற்பனையானது. அதை முழுபொறுப்பேற்று நடத்திய தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் மற்றும் அதற்கு மூலக் காரணமாக இருந்த தோழர் பிரகாசு இருவரையும் பாராட்டி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் சால்வை அணிவித்தார். முற்போக்கு புத்தகக் காட்சியில் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெற்று, நூல்கள் விற்க துணைநின்ற மாவட்டக் கழகத்தோழர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தோழர்கள் எட்வின் பிரபாகரன், அருண் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்), அருண் கோமதி (தாம்பரம் நகர அமைப்பாளர்),‌ பேரன்பு (ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மாணவர் கழகம்), பிரகாசு, தினகரன், மனோகரன், அன்பரசு, ஆகியோர் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
வலைதள மேம்பாடு, தொழில்நுட்ப அணி செயல்பாடுகள், செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி, ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.‌ தோழர்கள் பூர்ணிமா, இராசேந்திரன் ஆகியோர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் கழக வெளியீடுகளை வழங்கி, அவர்களை வரவேற்றார். மாவட்டம், பகுதி பொறுப்பாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.புரட்சிப் பெரியார் முழக்கம் சென்னை மாவட்டம் சார்பாக 1,700 சந்தா திரட்டி வருகிற டிசம்பர் 31-க்குள் ஒப்படைப்பது.
(சந்தா குறித்து பேசிய சில நிமிடங்களிலே தோழர்கள் 1700 சந்தாவுக்கான ரசீது புத்தகத்தை வாங்கி கொண்டனர். இளைஞரணி, மாணவரணி, மாவட்டக் கழகத் தோழர்கள் ஆர்வமுடன் ரசீது புத்தகத்தை பகிர்ந்துக் கொண்டனர் )
2.வருகிற சென்னை புத்தக காட்சியில் நிமிர்வோம் பதிப்பகம் பங்குபெற ஏற்பாடுகள் செய்து, மாவட்டக் கழகம் முழு ஒத்துழைப்பு வழங்குவது.
3.கோவை தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான எண்ணிக்கையில் பங்கேற்க முடிவு.
பெரியார் முழக்கம் இதழ் 27112025

———————————————————————————————————————————

You may also like...