சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!
பாலஸ்தீன ஆதரவுக் குழு நடத்திய பாலஸ்தீன விடுதலைப் பேரணி 21.06.25 அன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதான த்தில் தொடங்கி எழும்பூர் ரவுண்டானா அருகில் நிறைவு கண்டனக் கூட்டமாக நிறை வடைந்தது. கண்டனக் கூட்டத்தில் குழந்தைகளைத் திட்டமிட்டு கொன்றுகுவிக்கும் இஸ்ரேல்! காசா மீதான இனஅழிப்புப் போரை நிறுத்தக்கோரி திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி அவர்கள் உரையாற்றினார்.
பேரணியில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் , மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வடசென்னை மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தட்சணாமூர்த்தி, ஏசு குமார், தினகரன் மற்றும் கழக தோழர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 26062025இதழ்
