தோழர் சக்குபாய் நெடுஞ்செழியன் நினைவேந்தல்!கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்!

பெரியார் பேருரையாளர், ஆசீவக ஆய்வாளர், பேராசிரியர் முனைவர் தோழர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 26.01.2025 திங்கட்கிழமை காலை 9.30 மணி அளவில் திருச்சி, இராசாராம் சாலை, கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள கயிலை மணி அரங்கத்தில் நடைபெற்றது. நடராசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
ஆ. இராசா (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் தோழர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களின் படத்திறப்பு செய்து மலர்தூவி மரியாதை செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினார்.அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளி கல்வித்துறை அமைச்சர்) அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார். குடந்தை இகவரசன் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களின் நினைவைப் பகிரும் வகையில் கவிதை பாடல்கள் பாடினார்.
பெ. மணியரசன் (தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர்), ஓய்வுப்பெற்ற ஐ.ஜி க.வடிவேல், மருத்துவர்கள் செந்தில்குமார், யாழினியன், நடராசன், இளவஞ்சி இளையகுமார், இராசா. இரகுநாதன், பாப்பாநாடு காமராசு,கவித்துவன், திருமாறன், அறிவு, பேராசிரியர் வீரமணி, பிரவீன், ஐயம் பெருமாள், ம.பொன்னிறைவன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சக்குபாய் மற்றும் அவரது கணவர் நெடுஞ்செழியன் ஆகியோரது பொது வாழ்வில் ஏற்பட்ட இன்ப, துன்பங்கள் மற்றும் நட்பு முறைகளைப் பற்றி நினைவுகளைப் பகிர்ந்து உரையாற்றினார். சக்குபாய் – நெடுஞ்செழியன் அவர்களது மகள் நகைமுத்து அவர்கள் நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.

You may also like...