பாஜக முயற்சி முறியடிப்பு!
திருவல்லிக்கேணி பகுதி வி.பி ராமன் சாலையில் பெரியார் சிந்தனைப் பலகை அருகில் பாஜகவினர் இரவு நேரத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பத்தை வைக்க முற்பட்டனர். செய்தியறிந்த கழகத் தோழர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்து கொடிக் கம்பத்தை எடுக்க வைத்தனர். ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் சு.கோபிநாத், சே.ராஜேஷ், த.நா.சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் குமார், யாழினி ஆகியோர் உடன் இருந்தனர்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.
