நாமக்கல்லில் சமத்துவ பொங்கல் விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கம்பன் நகரில் தேவி மாதேஸ்வரன் இல்லத்தில் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கழகத் தலைமைக் குழு உறுப்பினர் கேப்டன் அண்ணாதுரை பொங்கல் விழா சிறப்புரை நிகழ்த்தினார்.
இலக்கிய தளம் அன்பழகன், பகலவன் (மொழிப்போர் தியாகிகள் நினைவு குழு), மு.சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்), ஆர் கே.குமார் (தி. க மாவட்டத் தலைவர்), ஸ்ரீ வடிவேலு (நகரச் செயலாளர்), மி.த தண்டபாணி (நகரத் தலைவர்), தோழர்கள் பிரகாஷ், மோகன், கார்த்தி சரவணன் ஆகியோரின் குடும்பமும் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.
கம்பன் நகர் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.பகுதிக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாலை 4-மணியளவில் அனைவருக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக சுதாமணி ராஜ் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.
