நிமிர்வோம் வாசகர் வட்ட கருத்தரங்கு

நிமிர்வோம் வாசகர் வட்ட 30-வது சந்திப்பு கழகத் தலைமை அலுவலகத்தில் பிப்-7 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. திராவிட மொழிந்நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரின் படத்தினை திறந்து வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கரிகாலன் ஊடகவியலாளர் “ஈழத்தடிகளும், மறைமலையடிகளும் பெரியாரை எதிர்த்தார்களா?” என்ற தலைப்பில் பல வரலாற்றுச் செய்திகளையும், பார்ப்பன எதிர்ப்பில் தமிழ்தேசியம் போர்வையில் எப்படி செயல்படுவது என்பதையும் சைவ-வைணவ முரண்பாடுகள் என பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் “காந்தியடிகள் படுகொலை ஏன் இன்றும் பேசுபொருள்” என்ற தலைப்பில் காந்தியின் கொலை எப்படி நிகழ்ந்தது, கொலைக்கு பிறகு பெரியார் அகில இந்திய வானொலியில் பேசியது, காந்தியின் இறப்பை இன்றும் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் என பல செய்திகளை பகிர்ந்து கொண்டார்.
சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தோழர் தமிழ் குமரன் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, சு.கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), பேரன்பு (சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), குடியரசு, வடசென்னை தோழர்கள்
தினகரன், ஏசுகுமார், அருள்தாஸ், ராஜேந்திரன் மற்றும் திருவல்லிக்கேணி தோழர்கள் லீலா, தேன்மொழி, யாழினி, குமார், பிரவீன், மனோஜ், அஜித், அருண், காவை.இளவரசன், சுகந்தன், தாமரை, ஊடகவியலாளர்கள் பிரகாசு, எழிலரசன் மற்றும் புருஷோத்தமன் செய்தியாளர் பிரசாந்த் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

You may also like...