கழகத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: எழில் நிலா- தினேஷ் குமார் வாழ்க்கை இணையேற்பு விழா!

திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த குப்புசாமி – சுலோச்சனா ஆகியோரது மகன் தினேஷ் குமார் அவர்களுக்கும் திருப்பூர் மாவட்டம் சிட்கோ பகுதியைச் சார்ந்த ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர், பழ. கௌதமன் – அமுதா ஆகியோரது மகள் எழில் நிலா ஆகியோருக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா 25.01.2026 அன்று காலை 9 மணியளவில் திருப்பூர் ஊத்துக்குளி காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.

கவிஞர் பழ. புகழேந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். சுப. வீரபாண்டியன் (தலைவர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை) வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணை நல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினர்.

வந்தியதேவன் (ம.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர்), காமராஜ் (சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்), ஊத்துக்குளி குமார் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்.உஷா (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க சிட்கோ கிளைச் செயலாளர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம் இதழ்12022026

You may also like...