மேட்டூர், திருப்பூரில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

கண்டன ஆர்ப்பாட்டம் மேட்டூரில் 12.02.2026 மாலை 5.00 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்றது. திமுக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதி தலைமை ஏற்றுக் கண்டன உரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ரத்தினவேல் (காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்), மெய்யழகன் (விசிக சேலம்மேற்கு மாவட்டச் செயலாளர்) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பூர்: 12-02-2026 மாலை 4.30 மணி அளவில் பெரியார் சிலை அருகில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவின் மத்திய மாவட்டச் செயலாரும் சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. தோழமை கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கத் தோழர்கள் மற்றும் முகில்ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்) தமிழகத்திற்கு நிதி மறுத்த ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ் அமுதன் (மார்க்சிய முற்போக்காளர் பேரவை), மற்றும் கழகத் தோழர்கள் சங்கீதா (மாவட்ட அமைப்பாளர்), மாதவன் (மாநகரச் செயலாளர்), மாரிமுத்து (மாநகரத் துணைத் தலைவர்), முத்து (மாநகர அமைப்பாளர்), சிரீஜா, இனியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்19022026

You may also like...