தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னையில் கழகத்தினர் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக தமிழர் திருநாள் பொங்கல் விழாவை தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நடன நிகழச்சிகள் என கோலகல கொண்ட்டாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதன் செய்தி தொகுப்புகள்:

சென்னை திருவல்லிக்கேணியில் மறைந்த கழகத் தோழர். பத்ரி நாரயணனின் முன்னெடுப்பில் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் என அனைவரும் இணைந்து தமிழர் திருநாள் பொங்கல் விழா கடந்த 26-ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவை திருவல்லிக்கேணி பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என அனைவரும் இணைந்து, கோலாகல கொண்டாட்டத்துடன் சனவரி 13 மாலை 5 மணி அளவில் வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்றது.

தோழர் கார்மேகம் கலைக்குழுவினரின் பறை இசை ஆட்டம், ஒயிலாட்டம் மயிலாட்டம், கிராமிய பாடல்கள், பொக்களிக்கால் ஆட்டம், நெருப்பு நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மக்களை வெகுவாக ஈர்த்தது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி , தி. தமிழ் (திரைப்பட பட இயக்குநர், நடிகர்), முனைவர் மைம் கோபி (திரைப்பட இயக்குநர், ஜி மைம் ஸ்டுடியோ நிறுவனர்), திருமதி ஆர். சாஷா( திருநங்கை சமூக ஆர்வலர், அரசியல் செயற்பாட்டாளர்- திமுக), தமிழ்ச்செல்வன் (சேலம் ஆர்.ஆர் பிரியாணி உரிமையாளர்) மற்றும் ஆர்.என் துரை (திமுக மாவட்ட துணைச் செயலாளர்) ஆகியோர் பரிசளித்து வாழ்த்துரை வழங்கினர்.

சிறுவர்களுக்குக்கான மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தோழர்கள் அன்பு தனசேகர் (கழகத் தலைமைக் குழு உறுப்பினர்), கமலா செழியன் (திமுக மாமன்ற உறுப்பினர்), கீர்த்தனா, எம்.எஸ் கேட்டரிங் உரிமையாளர் விஜய், பவர் பாண்டி சிலம்பம் மாஸ்டர், வெங்கடேசன் (விசிக மாவட்டச் செயலாளர்) ஆகியோர் பரிசளித்து வாழ்த்தினார்கள்.

விளையாட்டுப் போட்டிகள்: திருவல்லிக்கேணியில் 26-ஆம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி- 4 அன்று காலை 10-மணிக்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்வை துவக்கி வைக்க வருகை தந்த தோழர்கள் நிவேதா ஜெசிகா (தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்) மற்றும் கீர்த்தனா (கேரம் உலக சாம்பியன்) இருவரும் பறை இசை முழங்க ஊர்வலமாக விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடமான சைவ முத்தையா 5வது தெருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

நிவேதா ஜெசிகா (தேசிய மோட்டார்_சைக்கிள்_பந்தய_சாம்பியன்) ஓட்டப் பந்தய போட்டியை தொடங்கி வைத்து உரையாற்றினார். “நான் இந்த துறையில் சாதிப்பதற்கு உந்து சக்தி பெரியார்தான். மோட்டார் சைக்கிள் துறை ஆண்களுக்கானதாக இருந்தது, இன்றைக்கு பெண்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். திராவிட மாடல் அரசு விளையாட்டு துறைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் மாவட்டந்தோறும் முதலமைச்சர் கோப்பை பந்தயம் நடத்தி வருகிறது. விளையாட்டு துறையில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் உலக அளவில் தமிழ்நாடு விளையாட்டு துறை கவனம் பெற்று வருகிறது. எனவே இளைஞர்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் ஆர்வமுடன் பங்குபெறுங்கள் அது உங்களுக்கு உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. எங்களைப்போல் ஏராளமான பெண்கள் இன்னும் இந்த துறையில் சாதிக்க முன்வாருங்கள்” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

கீர்த்தனா (7வது_உலக_கோப்பையில்_மூன்று_பிரிவில்_தங்கம் வென்ற உலக சாதனையாளர்) கேரம் போட்டியை தொடங்கி வைத்து உரையாற்றினார். “நான் இந்த அளவுக்கு உலக அளவில் வெல்வதற்கு முக்கிய காரணம் என்னுடைய பயிற்சியாளர்தான். நான் வறுமையின் பிடியில் மீள முடியாமல் இருந்த நிலையில் எனக்கு பெரு உதவியாக என்னுடைய குடும்பமும், பயிற்சியாளரும் உறுதுணையாக இருந்ததால்தான் உலக சாம்பியன் பட்டம் சாத்தியப்பட்டது. தமிழ்நாடு அரசு எனக்கு 1 கோடி ரூபாய் தற்போது தந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வடசென்னை என்றாலே சிலரது தவறான கண்ணோட்டத்தை நான் சிறிதளவு மாற்ற முயற்சித்து இருக்கிறேன். ஆகவே இளைஞர்கள் ஏதாவது ஒரு விளையாட்டு துறையில் பங்கெடுத்து, பயிற்சியாளர்கள் சொல்படி கடுமையாக உழைத்தால் அனைவரும் நாளை உலக சாம்பியன்தான்” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
திமுக மாவடட துணைச் செயலாளர் ஆர்.என். துரை பேசுகையில், கழகத்தின் இந்த செயல்பாடுகளை பாராட்டி நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று கூறினார்.

உமாபதி (மாவட்டச் செயலாளர்) பேசும்போது, “இந்த பொங்கல் விழாவை மறைந்த பத்ரி நாராயணன் முன்னெடுத்தார் பிறகு இந்த பகுதி மக்களும் இயக்கமும் சேர்ந்து 26-வது ஆண்டாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு ஒரு நெகிழ்வான நிகழ்வு காரணம் பெரியாரின் பெண்ணுரிமை உணர்வோடு தங்கைகள் இந்த நிகழ்வுக்கு வந்ததுதான். பெரியார் பெண்களை ஆண்களுக்கு சமமாக எல்லா துறையிலும் சாதிக்க வேண்டும் என்றார். அந்த வகையில் தோழர் நிவேதிதாவும் கீர்த்தனாவும் சாதித்து இருக்கிறார்கள் அவர்களை சிறப்பிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது” என்று கூறினார்.

நிவேதிதா அவர்களுக்கு ஆர்.என்.துரை (திமுக மாவட்ட துணைச் செயலாளர்) கழக வெளியீடுகளை வழங்கினார். கீர்த்தனா அவர்களுக்கு தபசி குமரன் கழக வெளியீடுகளை வழங்கினார். கார்மேகம் குழுவினருக்கு முகில் ராசு (திருப்பூர் மாவட்ட தலைவர் திவிக) கழக வெளியீடுகளை வழங்கினார். சதுரங்க போட்டியை வீராங்கனை கீர்த்தனாவின் பயிற்சியாளர் நந்தா தொடங்கி வைத்தார். சுமார் 10-மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கான பானை உடைத்தல், கரும்பு உடைத்தல், இசை நாற்காலி போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர்‌ ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இளையோருக்கான கபடி மற்றும் கைப்பந்து போட்டிகள் கில் ஆதர்ஷ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆண்கள்‌ பெண்கள் என 50-க்கும்‌ மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விளையாட்டு போட்டியை கண்டுகளித்தனர். போட்டிகளை திருவல்லிக்கேணி கழகத் தோழர்கள் மற்றும் பகுதி இளைஞர்கள் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது. கழகத் தோழர் இரண்யா சிறார்களுக்கான போட்டிகள் மற்றும் பெண்களுக்கான போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

திருவல்லிக்கேணி பகுதி இளைஞர்கள் ரஞ்சித், பாலா, மணி, அருண்,‌ உள்ளிட்ட பலரும் கழகத்தினர் திருவல்லிக்கேணி பகுதி பொறுப்பாளர்கள் கோபிநாத், ராஜேஷ், சூர்யா, யாழினி, ஓவியா, இளவரசன், வளவன், வீரா, இளைஞரணி அமைப்பாளர் அருண், மாணவர் கழகம் குறளரசி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வை நடத்த உறுதுணையாக இருந்தனர்.

மயிலாப்பூர்: கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் முன்னெடுப்பில் கடந்த 10 ஆண்டுகளாக மயிலாப்பூர் சுப்பராயன் சாலையில் தமிழர் திருநாள் பொங்கல் விழா கொண்ட்டாங்கள் நடைபெற்று வருகிறது. சனவரி-15 அன்று மயிலாப்பூர் பகுதி மக்கள் பகுதி கழகத் தோழர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவாக முன்னெடுத்து வருகின்றனர்.

உழவன் கலைக்குழு பறை இசை ஆட்டம், ARUN ACE Free Ways குழுவினரின் நடனம், SVB ராவணன் குழுவினரின் களரி, சிலம்பாட்டம், VS Boxing Club குழுவினரின் குத்துச்சண்டை ஆட்டம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் நூலகம் தோழர்கள் வழக்கறிஞர் சரவணன், கண்ணன் விசிக ஆகியோர்‌ கலைநிகழ்ச்சி நிகழ்த்திய தோழர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கி, இந்த விழாவை முன்னெடுக்கும் மயிலாப்பூர் பகுதிக் கழகத் தோழர்களை பாராட்டினார்கள்.

கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), உமாபதி (மாவட்டச் செயலாளர்) ஆகியோர் வழங்கினர்.

விளையாட்டுப் போட்டிகள்: சனவரி-11 அன்று மயிலாப்பூர் பகுதிக்கழகம் சார்பில் சுப்பராயன் சாலையில் தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. விளையாட்டு போட்டியை டி. கிருஷ்ணமூர்த்தி (124வது வட்ட முன்னாள் செயலாளர்) அவர்கள் துவக்கி வைத்தார். அன்புக்குரிய தோழர் மோகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) மற்றும் கழகத் தோழர் மாஸ்டர் பிரகாசு, ஜேம்ஸ், அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். இராவணன் (மாவட்டத் துணை செயலாளர்), மயிலாப்பூர் கழகத் தோழர்கள் சிவா, மனோகர், பிரவீன், பார்த்திபன், உதயா, பெரியார் முழக்க உமாபதி, கார்த்திக், குமரா,வெ.கார்த்திக், ஸ்டாலின், கௌதம் ஆகியோர் விளையாட்டு போட்டி நிகழ்வை ஒருங்கிணைத்தனர். போட்டோ மதன் அவர்கள் புகைப்படம் எடுத்தார்கள். மயிலாப்பூர் பகுதி குழந்தைகள் பெண்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் இணைந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

கழகத் தோழர்கள் சுகுமார், மனோகரன், முழக்கம் உமாபதி, பிரவீன்குமார், பார்த்தா, உதயா, சிவகுமார், குமரா, பாரி சிவகுமார், ஸ்டாலின், கெளதம், ஜெயந்தி, அம்பிகா, வினோத்குமார், சத்யா, பிரமா, தட்சணாமூர்த்தி (வடசென்னை அமைப்பாளர்) மற்றும் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29012026

You may also like...