சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!
தை-2 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது! சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 16.01.2026 காலை 10 மணி அளவில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள திருவள்ளுவர் உருவச் சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தங்கதுரை, வெற்றிமுருகன், மாநகரத் தலைவர் பாலு, மாநகர செயலாளர் ஆனந்தி, மாநகரப் பொருளாளர் பிரபு, மாநகர அமைப்பாளர் தேவராஜ், செந்தில், FM பாலமுருகன், பரமேஷ், கோகுலகண்ணன், பாரப்பட்டி முருகேசன், நவராஜ், விக்ரம், அலாவுதீன், தமிழினி, நீலகண்டன், ஹரினி, சுதர்சன் ஆகிய கழகத் தோழர்கள் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.
