கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்! மாபெரும் கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி!
தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேசன் மற்றும் சேலம் ராயல் பவர் அரிமா சங்கம் சார்பாக நடத்திய 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி சேலம் கருப்பூர் பத்மவாணி மகளிர் கல்லூரியில் 12.01.2026 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. பத்மவாணி மகளிர் கல்லூரி சேர்மேன் சத்யமூர்த்தி தலைமையேற்றார்.
சிவகேந்திரன் குட்டி (துணைத் தலைவர், தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன்) முன்னிலை வகித்தார். சிவபெருமாள் (பொதுச்செயலாளர்-தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேசன்) வரவேற்புரையாற்றினார்.
மகேஷ் (காஞ்சி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர்), அரிமா விவேகானந்தன் (தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன் மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர்), பத்மவாணி மகளிர் கல்லூரி நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர். சௌந்திரராஜன் (பள்ளி தாளாளர்,சௌத் இந்தியன் மெட்ரிக்குலேசன்), கஞ்சமலை (பள்ளி தாளாளர், சுவாமி விவேகானந்தா மெட்ரிக்குலேசன்), முத்து (பள்ளி தாளாளர், நார்த் பார்க் மெட்ரிக்குலேசன்), முதல்வர் சுந்தர், வழக்கறிஞர் ஆனந்த் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கழகத் தலைவர், தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன் தலைவருமான கொளத்தூர் மணி, மணி (ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கிக் பாக்சிங் நிர்வாகிகள் பிரகாஷ், துரை, சசிகுமார் மற்றும் கலந்து கொண்ட 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. தனசேகரன் (தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேசன் மாநில துணை பொதுச்செயலாளர், சேலம் மாவட்ட பொறுப்பாளர்) நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் கருப்பூர் சக்திவேல் (சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர்), காவை அவினாசி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.
