கழகத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: அருந்ததியர் சமூகநீதி கூட்டமைப்பு

அருந்ததியர் சமூகநீதி கூட்டமைப்பின் சார்பாக அருந்ததியர் உள் ஒதுக்கீடு மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த மாநில கலந்தாய்வு கூட்டம் 04.02.2026 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள சாந்தி இன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். அருந்ததியர் சமூக நீதி கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் V. அலமேலு தலைமை வகித்து நோக்கவுரையாற்றினார்.

(Manager-voice program, Dhwanin foundation) M. அய்யப்பன், (ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர்) கு. ஜக்கையன், (த. அ. இ. முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்) S. T. கல்யாணசுந்தரம், (சமூக விடுதலை முன்னணி) சுந்தர், (தமிழ்ப் புலிகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர்) செல்வ வில்லாளன், (விடுதலை வேங்கை கட்சியின் நிறுவனத் தலைவர்) தமிழ் இன்பன், (TN SCA Best Association மாநில பொறுப்பாளர்) ஜெகதீஸ்வரன், (இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் உதவி தலைவர்) S. முருகேசன், (திராவிடர் தமிழர் கட்சி மாநில இணைச்செயலாளர்) வேங்கை பொன்னுசாமி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள் இட ஒதுக்கீட்டு உரிமை என்ற தலைப்பில் (ASJF) செய்யும் சமூக செயல்களை பாராட்டி சமூக நீதிகக்காக சமுகப்பணி செய்யும்போதும், உரிமைக்காக போராடும்போதும் அனைவரும் ஒன்று திரண்டு உறுதியாக நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த அமைப்பிற்கு திராவிடர் விடுதலைக் கழகம் உறுதுணையாக நிற்கும் எனவும் உங்களுக்காக சமூக அக்கறை உள்ள பலரை ஒன்று திரட்டுவோம் என கருத்துரையாற்றினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒரு மாநில அரசின் சமூக நலத்துறை செய்யும் பணிகளை இந்த அமைப்பு செய்வதை பாராட்டினார்.
பெரியார் முழக்கம் இதழ்12022026.

You may also like...