கழக ஏட்டுக்கு சந்தா தோழர்கள் ஆர்வம்

சென்னையில் கடந்த சனவரி-13 அன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் திருவல்லிக்கேணி பகுதிக் கழகம் சார்பாக சந்தாவாக ரூ.30000 அருண் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) கழகத் தலைவரிடம் வழங்கினார்.

திருச்சி மாவட்டக் கழகம் சார்பில் தோழர் மனோகரன் (திருச்சி மாவட்டத் தலைவர்) 20 பெரியார் முழக்க சந்தாவுக்கான தொகை ரூ.6000 பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
வடசென்னை மாவட்டக் கழகம் சார்பில் சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) அவர்கள் முதற்கட்டமாக 25 சந்தா ரூ.7500-அய் பிரசாந்த் (புரட்சிப் பெரியார் முழக்கம் செய்தியாளரிடம் வழங்கினார்.
நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்)
பெரியார் முழக்கம் இதழ்12022026.

You may also like...