அண்ணா சிலைக்கு மரியாதை
பேரறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி, (3/2/26) காலை 10 மணிக்கு, பத்ரிநாரயாணன் நினைவுப் படிப்பகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று இராயப்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தோழர்கள் கொள்கை முழக்கமிட்டனர். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம. கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப. அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த. நா. சூர்யா, தோழர்கள் இரண்யா, மகிழவன், குமார், தேன்மொழி, லட்சுமணன், லீலா, துரைராசு, மனோஜ், வீரமுத்து, செய்தியாளர் பிரசாந்த், சுகந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.
