புதுவையில் சீமானை தோலுரித்த பெண்கள்
பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் பெண் உரிமைப் போராளி என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதுச்சேரி பெரியார் படிப்பகம் ராஜா நகரில் 25.01.2026 அன்று மாலை 6 மணிக்கு தோழர். ஆனந்தி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் லதா, விடுதலை கலைக்குழு மணிமேகலை, திராவிட மகிழ்நன் ஆகியோர் பெண்ணிய பகுத்தறிவு பாடல்களை பாடினார்கள்.இளவரசி சங்கர் ( பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), காயத்திரி ஸ்ரீகாந்த் (திமுக -புதுச்சேரி), அ.அனுசுயா (விசிக) ஆகியோர் கருத்துரையாற்றினர்.
கழகத் தோழர் இரண்யா சீமானின் கேலவமான அரசியலையும், நாதகாவின் பெண்கள் மீதான தாக்குதலும், தமிழ்த்தேசியம் எனும் பெயரில் தன்னுடைய சுயலாபத்திற்காக பெண்களைக் கேவலப்படுத்தும் சீமானை தோலுரிக்கும் விதமாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேடை பேச்சு முழுக்க தோழமை இயக்க முற்போக்கு பெண் தோழர்களே கருத்துரையாற்றினர். கருத்தரங்கத்தில் பெரியார் போராட்டத்தின் விளைவால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது பற்றிய உணர்வுபூர்வமான பல்வேறு செய்திகளை பெண் தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். கருத்தரங்கத்தில் இரா.உமாபதி (மாவட்டச் செயலாளர்), கடலூர் தோழர் சிவா,கோபி (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்) த.நா சூர்யா ( திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்), மற்றும் உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்19022026
