ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா
கழகத் தோழர்கள் ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா பிப்ரவரி-01 அன்று காலை 9 மணியளவில் மந்தைவெளியில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். பேராசிரியர்.சரசுவதி, மயிலாடுதுறை இளையராசா (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இணையர்களின் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். பாரி.சிவக்குமார் நண்பரான தோழர் சக்திவேல் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சென்னை மாவட்டக் கழகம் சார்பில் பெரியார் அம்பேத்கர் படம் பரிசாக கழகத் தலைவர் அவர்கள் பாரி சிவா அவர்களிடம் வழங்கினார். கழகத் தோழர் குமரன் தன்னுடைய ஆட்டோவில் எழுதியிருந்த ” மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்ற பெரியார் வாசகத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை.இராசேந்திரன் பார்வையிட்டனர்.
இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன் | ந. தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், ஊடகவியலாளர் பிரகாசு, மயிலாப்பூர் சுகுமாறன், முழக்கம் உமாபதி, மனோகரன், பிரவீன், சிவா, மணி, அம்பிகா, வினோத், கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), கனி, அஜித், மனோஜ், தேன்மொழி, மாணவர் கழகம் குறளரசி, குடியரசு, இரண்யா, ப்ரித்தி, அகராதி, மஞ்சுநாத், செய்தியாளர் பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.
