தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்
இளங்கலை ஃபிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி படிப்புகளுக்கும் நீட் (NEET) நுழைவுத் தேர்வு. நீட் நுழைவுத் தேர்வு எனும் அநீதியை மருத்துவப் படிப்புகளில் அரங்கேற்றி வருவதோடு தற்போது இளங்கலை ஃபிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி படிப்புகளுக்கும் நீட்டைக் கட்டாயமாக்கி அறிவித்துள்ளது தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP).
தமிழ்நாட்டை ஆண்ட அ.இ.அ.தி.மு.க-வும் ஆளுகின்ற தி.மு.க-வும் பலமுறை நீட் தேர்விற்கு எதிராகவும் தமிழ்நாட்டிற்கு நீட்டிலிருந்து விலக்கு கேட்டும் சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிருந்தார்கள். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தற்போது துணை மருத்துப் படிப்புகளுக்கும் நீட் என்பது “தமிழ்நாடு தமிழருக்கே!” என்கிற முழக்கத்தை ஓங்கி ஒலிக்க வேண்டிய தேவையை உருவாக்குகிறது! ஒவ்வொரு வருடமும் நீட் நுழைவுத் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் அதிகரித்து வரும் சூழலில் NCAHP-ன் இந்த நடவடிக்கை பச்சை அயோக்கியத்தனமே. வேறெந்த மாநிலத்தை விடவும் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பிலும், மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வசதிகளிலும் தமிழ்நாடு தனித்துவம் பொருந்தியது. தமிழ்நாட்டின் துணை மருத்துவப் படிப்பை சூறையாடும் NCAHP-ன் இந்தப் போக்கை தமிழ்நாடு மாணவர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
– பேரன்பு,
சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு மாணவர் கழகம்.
31.01.2026 பெரியார் முழக்கம் இதழ்05022026.
