மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

சனவரி-25 அன்று நடராசன் – தாளமுத்து உள்ளிட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு மூலக்கொத்தலம் நினைவிடத்திற்கு பேரணியாகச் சென்று, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர்கள் சேத்துப்பட்டு இராசேந்திரன், மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, ம. கி. எட்வின் பிரபாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வ. வேலு, இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், சுகுமார், இரண்யா, குறளரசி, துரை, சு. கோபிநாத் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.

You may also like...