மேட்டூரில் தை 1 தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா!
மேட்டூர் நகர கழகத்தின் சார்பாக தை 1 தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் 15.01.2026 காலை 9 மணியளவில் மார்டின் (மேட்டூர் நகர தலைவர்) தலைமையில் நடைபெற்றது. சூரியகுமார் (சேலம் மேற்கு மாவட்ட தலைவர்), கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்), டைகர் பாலு (சேலம் மாவட்ட அமைப்பாளர்), குமரப்பா (மேட்டூர் நகரச் செயலாளர்), அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் அமுல்ராஜ் இசைக்குழு பறை இசை, பகுத்தறிவு திரைப்பட பாடல்கள் பாடினார்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழகத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. சம்பத் (சேலம் மாவட்ட பொருளாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), விஜயகுமார் (கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்), மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29012026
