நீதிமன்றத்தில் மத விழா!- கழகம் புகார்

ஈரோட்டில் அரசுக்கு சொந்தமான ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி கற்பக விநாயகர் திருக்கோவிலில் 19.05.2024 அன்று கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது. “அரசுக்கு சொந்தமான நீதிமன்ற வளாகத்திற்குள் குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லும் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே மத வழிபாட்டு விழாவை தடுத்த வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஈரோடு மாவட்ட தலைமை நீதிபதி அவர்களிடம் 17.05.24 அன்று விண்ணப்பம் அளித்திருந்தார்.
எனினும், அரசு விதிமுறைகளை மீறி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டிருக்கிறது. ஊடகங்களிலும் அதுகுறித்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுதொடர்பாக சட்ட ரீதியிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

You may also like...