‘நீட்’ எதிர்ப்பை மக்கள் இயக்கமாக்குவோம்!
தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுகள் உருவாக்கும் ‘தாக்கம்’ குறித்து ஆராய தி.மு.க. ஆட்சி, முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது. குழுவின் அறிக்கை இன்னும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் குழுவின் நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.வின் மாநிலப் பொறுப்பிலுள்ள கரு. நாகராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேசிய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றி 2020இல் ஒன்றிய ஆட்சி சட்டமாக்கி மருத்துவக் கல்வி தொடர்பான உரிமைகளை தன் வசமாக்கிக் கொண்டு விட்டது. மாநில அரசு உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளையே தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் மிக்க ஆணையமாக மாற்றியிருக்கிறது. இப்போது தமிழ்நாடு அரசு நியமித்திருக்கும் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை நியமிப்பதற்குக்கூட இந்த ஆணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று இப்போது பா.ஜ.க. பொறுப்பாளர் தாக்கல் செய்த மனு கூறுகிறது. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு...