எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்; கழகத் தலைவர் பங்கேற்று சிறப்புரை
ஈரோடு தெற்கு: திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு தெற்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 14.08.2024 காலை 11 மணியளவில் சூரம்பட்டி நால்ரோடு அருகில் உள்ள மதிமுக அலுவல அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் செல்வராசு, மாவட்டச் செயலாளர் எழிலன், அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, அறிவியல் மன்றப் பொறுப்பாளர் சிவக்குமார், மணிமேகலை, ஜோதி, திருமுருகன், கௌதம், கோபிநாத், விக்னேஸ், இரவி, அழகு, குமார், பிரபு, முருகேசன், ரங்கம்பாளையம் பிரபு, முகுந்தன், அய்யப்பன், நல்லதம்பி, சுரேஷ், விஜய்ரத்தினம், பழனிசாமி, சத்திய மூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மாணவர்களிடையே நிலவிவரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான பரப்புரையை மேற்கொள்வதெனவும், ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்டவைகளை இயற்றக்கோரி அரசை வலியுறுத்துவதோடு அதற்கான பரப்புரையை மக்களிடையே கொண்டு செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு தெற்கு மாவட்ட ஆலோசகராக இருந்து மறைந்த பெரியார் விருதாளர் இனியன் பத்மநாபன் படத்தைக் கழகத் தலைவர் திறந்து வைத்தார்.
மாவட்ட நிர்வாகப் பொறுப்புகளில் மாவட்ட துணைத் தலைவராக கிருஷ்ணன் அவர்களும் மாவட்ட துணைச் செயலாளராக செந்தில் அவர்களும் புதிதாக நியமிக்கப்பட்டனர். நிறைவாக மணிமேகலை நன்றி கூறினார்.
கடலூர்: கடலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17-08-2024 அன்று சிதம்பரத்தில் உள்ள ABN மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமைத் தாங்கினார்.
பெரியார் விழுது திராவிட மகிழன் கடவுள் மறுப்பு வாசகம் கூறக் கூட்டம் தொடங்கியது. கடலூர் மாவட்டக் கழக அமைப்பாளர் அ.மதன்குமார் வரவேற்புரையாற்றினார்.
அடுத்ததாக கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தற்போதைய அரசியல் சூழலில் நாம் எப்படி செயல்படுவது, கடலூர் மாவட்டக் கழகத்தின் எதிர்கால செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேசினார்.
மேலும் செ.பிரகாசு, தாமரை, சிவக்குமார், நா.கொளஞ்சி, அறிவழகன், சதிஷ் ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்பாடுகளை முன்வைத்துப் பேசினார்கள்.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவர் பேசுகையில்:- தமிழ்நாட்டில் தற்போது மாணவர் – இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. ஜாதி, மதவாதச் சிந்தனைகளைப் போலவே போதைப்பொருள் கலாச்சாரமும் மிகவும் ஆபத்தானது. இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கழக சார்பில் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டுமெனப் பேசினார்.
மேலும் மதன்குமார் மாவட்ட அமைப்பாளராகத் தொடர்வார் என்றும் அறிவித்தார்.
இதில் நிவாஸ், அரவிந்தன், ரூபன், இனியதர்ஷன், புகழேந்தி, தீபக், திருமூர்த்தி, தென்னரசு, இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கழக ஆதரவாளர்களான அசோக், கிருபா, ஆலப்பாக்கம் செந்தில் கழகத் தலைவருக்கு பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.
கலந்துரையாடல் கூட்டம் நடத்துவதற்காக திருமண மண்டபத்தை வழங்கி உதவிப்புரிந்த பதுருதின் அவர்களுக்குக் கழகத் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
திருச்சி: திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 15.08.2024 அன்று மாலை 5 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் ஆகியோர் போதைப்பொருள் கலாச்சாரத்தை எதிர்த்து விழிப்புணர்வுப் பயணம், கழகத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்கள்..
நிறைவாக அல்லித்துறை கோகுல்ராஜ், சுரேஷ் கண்ணன், தாயனூர் வி. அறிவழகன், நாச்சிக்குறிச்சி சி. நிரஞ்சன், ஆலம்பட்டி புதூர் க. ஆனந்தராஜ் உள்ளிட்ட தோழர்கள் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இதில் திருச்சி மாவட்டத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 22.08.2024 இதழ்