நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின
நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை இயக்கங்கள் தொடங்கி எழுச்சி நடைபோட்டு வருகின்றது.
சென்னை : முதல் நாள் தெருமுனைக் கூட்டம் : மாநில உரிமையைப் பறிக்கும், கல்வி உரிமையைத் தடுக்கும், மதவெறியைத் திணிக்கும் பாஜகவை எதிர்த்து, தமிழ்நாடு அரசின் ‘திராவிட மாடல்’-அய் ஆதரித்து, நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” மண்டல மாநாட்டை விளக்கி, தெருமுனைப் பிரச்சாரம், சென்னை இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில், (19.04.2022 மாலை 5:30 மணிக்கு மீர்சாகிப் பேட்டை மார்கெட் பகுதியில் 119ஆவது வட்ட கவுன்சிலர் திமுக கமலா செழியன் தொடங்கி வைத்தார்.
அடுத்ததாக அய்ஸ்ஹவூஸ்ஷேக் தாவூத் தெரு, இறுதியாக அய்ஸ்ஹவூஸ்கிருஷ்ணாம்பேட்டை பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி, பிரகாசு, ஜெய பிரகாசு, தேன்மொழி ஆகியோர் மக்களிடம் ‘திராவிட மாடல்’-அய் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மூன்று கூட்டத்திலும், கழகத் தோழர் நாத்திகன் பகுத்தறிவுப் பாடல்களை பாடி, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பொதுமக்களிடம், துண்டறிக்கைகள் கொடுக்கப்பட்டன.
இரண்டாம் நாள்: மயிலாப்பூர் பகுதி சார்பாக, 22.04.2022அன்று மாலை 5:30 மணிக்கு தேனாம் பேட்டை காந்தி நகர் பகுதியில் தொடங்கியது, தொடர்ந்து, மயிலாப்பூர் பல்லக்குமா நகர் தெரு, மந்தைவெளி சென்மேரிஸ்பாலம் ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடை பெற்றன.
தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், மாவட்ட செயலாளர் உமாபதி, சுகுமார், தமிழ்நாடு மாணவர் கழகம் தேன்மொழி, உதயா ஆகியோர் மக்களிடம் ‘திராவிட மாடல்’-அய் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மூன்று கூட்டத்திலும், கழகத் தோழர் நாத்திகன் பகுத்தறிவுப் பாடல்களை பாடி, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அதிர்வு பறைக்குழு பறையிசைத்தனர்.
மூன்றாம் நாள்: 23.04.2022 அன்று, வேளச்சேரி யில் மாலை 5 மணி முதல் 06:30 வரையிலும், மடிப்பாக்கத்தில் மாலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரையும், நங்கநல்லூரில் இரவு 8 முதல் 9:30 மணி வரையும் ஆகிய இடங்களில் நடைபெற்றன.
தலைமைக் குழு உறுப்பினர் கு.அன்புதனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, எட்வின் பிரபாகரன், குகன் ஆகியோர் மக்களிடம் ‘திராவிட மாடல்’ யை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மூன்று கூட்டத்திலும், கழகத் தோழர் நாத்திகன் பகுத்தறிவுப் பாடல்களை பாடி, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அதிர்வு பறைக்குழு பறை இசைத்தனர். மாநாட்டிற்கான நன்கொடையாக எட்வின் பிரபாகரன் ரூ.7500 மாவட்ட செயலாளரிடம் வழங்கினார்.
கோவை : இரண்டாம் நாளாக 24.4.2022 மாலை 6 மணிக்கு நல்லிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கமாக கழகப் பெயர் பலகையை இராஜலட்சுமி திறந்து வைக்க, மாவட்டத் தலைவர் பா.இராமச்சந்திரன் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.
கழகத் தோழர்கள் கிருஷ்ணன், புரட்சித் தமிழன், அமிலா ஆகியோர் பரப்புரை பாடல்களை பாட.. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் பிரசாந்த், மகிழவன் ஆகியோர் திராவிட மாடல் ஆட்சியில் மாணவர் நலன் குறித்து சிறு உரையாற்றினர். மாவட்ட கழகச் செயலாளர் யாழ்.வெள்ளிங்கிரி, ஒன்றிய பாஜக அரசின் மோசடிகள் குறித்தும் திராவிட ஆட்சியின் சாதனைகள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார். இறுதியாக மாநில பொருளாளர் துரைசாமி நிறைவுரையாற்றினார்.
அன்னூர் : 24.04.2022 அன்று அன்னூர் பயணியர் மாளிகை முன்பு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சித் தொடக்கமாக கழகத் தோழர்கள் கிருஷ்ணன், புரட்சி தமிழன், அமிலா ஆகியோர் பரப்புரை பாடல்களை பாடினர். பின்னர் தோழர்கள் சபரிகிரி, நிர்மல் குமார், வெங்கட், பா.இராமசந்திரன் ஆகியோர் திராவிட மாடல் ஆட்சி குறித்து உரையாற்றினர். இறுதியாக மாவட்ட கழகச் செயலாளர் வெள்ளிங்கிரி, மாநில பொருளாளர் துரைசாமியும் விளக்கி உரையாற்றினர். இக் கூட்டத்தை அன்னூர் பகுதி தோழர்கள் விஷ்ணு, மோகன்குமார், பார்த்திபன், நந்தகுமார், மனோ ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
மேட்டுப்பாளையம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 23.4.2022 மாலை “நமக்கான அடையாளம் திராவிட மாடல்” என்ற தலைப்பில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள எல்லம்மாள் லாட்ஜ் அருகே இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தோழர்கள் கிருஷ்ணன், புரட்சித் தமிழன் பாடல்களைப் பாடினர். தமிழ்நாடு மாணவர் கழகம் மகிழவன், சவுரிபாளையம் சிவராஜ் -திவிக, நிர்மல் -திவிக, சபாபதி (தமிழ் புலிகள் கட்சி) இறுதியாக வெள்ளிங்கிரி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினார். பல்லடம் சரஸ்வதி நன்றி கூறி சிறப்பாக நிகழ்ச்சி முடிந்தது. கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.
ஈரோடு : திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாநில உரிமைகளை பறிக்காதே, கல்வி உரிமையை தடுக்காதே, மதவெறியைத் திணிக்காதே, “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” மண்டல மாநாடு விளக்க தெருமுனை கூட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன் நடைபெற்றது. மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார். காசிபாளையம் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கோபி வேலுசாமி உரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 28042022 இதழ்