பெரியார் கொள்கை விளக்கக் கூட்டங்கள்

குமாரபாளையத்தில் : 28.09.2019 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு, மு.கேப்டன் அண்ணாதுரை தலைமை வகிக்க, மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட செயலாளர் சரவணன், காளிபட்டி பெரியண்ணன், இராசிபுரம் பிடல் சேகுவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் தொடக்கமாக காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் கோபி வேலுச்சாமி, பகுத்தறிவுக் கருத்துக்களை நகைச்சுவையாக எடுத்துக் கூறினார்.

இறுதியாக கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வின் மோசடிகள் போன்றவற்றைப் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினார். குமாரபாளையம் பகுதி  மோகன் நன்றி கூறினார். பொதுக் கூட்டத்திற்கு காளிப்பட்டி, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், இராசிபுரம், ஈரோடு, பவானி பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் இல்லம் திராவிடமணி இல்லத்தில் தோழர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மதுரையில் :  30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பெரியார் கொள்கையை பரப்பும் முதல் கூட்டம். 23.09.2019 அன்று மாலை 5 மணிக்கு, மேலூரில்,  பெரியார் 141ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பறை முழக்கத்துடன் தொடங்கிய பொதுக் கூட்டத்தை திருநங்கை செயற்பாட்டாளர் பாரதி கண்ணம்மா தொடங்கி

வைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் அய்யாவு, ளுனுஞஐ கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஜியாவுதின் வாழ்த்துரை வழங்கினார்கள். ஆராய்ச்சி மாணவி மாளவிகா, தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த. பாண்டியன் உரையாற்றினார்கள்.  இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் மா.பா. மணி அமுதன்  தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டியன், மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு பெரியார் கொள்கையை பரப்பும் முதல் கூட்டம் இது  என்பதும் – கொட்டும் மழையோடும் பொது மக்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விழுப்புரத்தில் : திராவிடர் விடுதலைக் கழகம் விழுப்புரம் மாவட்டம் சார்பில்,  தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டம் 05.10.2019 அன்று மாலை 6:30 மணிக்கு விழுப்புரம் கண்டமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமை வகித்தார். கிருஷ்ணராஜ், விஜி பகுத்தறிவு, தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் வரவேற்புரையாற்றினார்.  நிகழ்வின் தொடக்கமாக துரை. தாமோதரன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு நடைபெற்றது. அதன் பின், தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார் மற்றும் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் கா.சு. நாகராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். திராவிடர் கழகப் பெரியார் பெருந்தொண்டர் கே.வி. ராஜன், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, தி.மு.கழக விஜயகுமார், மக்ககள் அதிகாரம் சாந்தகுமார், பி.எஸ்.பி. மதிவதனன், காரை மாவட்ட தி.க. பெரியார் கணபதி, புதுச்சேரி மாணிக்கம், கோண்டூர் சந்தோஷ் மற்றும் தோழர்களும் பொது மக்களும் திரளாகக் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் து.சிறீதர் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 10102019 இதழ்

You may also like...