மதுரையில் ஜாதி எதிர்ப்பு கருத்தரங்கம்
ஜாதிய – வளர்க்க ஆணவப் படுகொலைகள் எதிர்ப்பு,பெண்களின் காதல் திருமணத் தேர்வு உரிமை, காதலர் உயிர் காக்க சட்டம், சமூகப் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சமத்துவக் கருத்தரங்கம் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் கிராமசுப்பு அரங்கம்(கவின் – சதீஷ்குமார் நினைவு அரங்கத்தில்) மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
ஜாதி ஒழிப்பு முன்னணி மதுரை மாவட்டச் செயலாளர் சீ.கா. தெய்வம்மாள் தலைமையில் நடைபெற்றது. தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் மதுரை மாவட்டச் அமைப்பாளர் கொ. மனோகரன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு பெண்கள் இயக்கத் தலைவர் தொ. ஆரோக்கிய மேரி நோக்க உரையாற்றினார்.
ஐந்திணை மக்கள் கட்சித் தலைவர் தேவதாசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாலின், தமிழ் புலிகள் கட்சியை முத்துக்குமார், மக்கள் தேசம் கட்சியைச் குரு விஜயன், திராவிடத் தமிழர் கட்சி விடுதலை வீரன், ஆதித்தமிழர் பேரவைச் கார்த்திக்,நீதிவேந்தன், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவை காமேஸ்வரி, மக்கள் பாதை பேரியக்கம் நா. அமுதா, தலித் விடுதலை இயக்கம் பீமாராவ் ஆகிய தோழர்கள் வாழ்த்துரையாற்றினார்கள்.
இட ஒதுக்கீடு, சிறப்புச் சட்டத்தின் அவசியம் என்ற தலைப்பில் வழக்கறிஞர். ப.பா. மோகன் மற்றும் ஜாதி,சனாதனம் மறுப்போம் – சமத்துவ சனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகத் தலைவர் மீ. தா. பாண்டியன் ஆகியோர் தமிழ்நாட்டில் நடந்த ஜாதி ஆணவப் படுகொலைகளை பற்றியும் ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கருத்துரையாற்றினர்.
நிறைவாக பெண்களின் காதல் கணவன் தேர்வுரிமை பறிப்பும் – ஜாதியும் என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு ஆணவக் கொலைகளை பற்றியும், தமிழ்நாடு அரசு சட்டசபையில் ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டத்தை பற்றி விவாதம் நடத்தி தனிச் சட்டம் இயற்ற வேண்டும், உயர்வு தாழ்வு மனப்பான்மையை மக்களிடம் இருந்து போக்கவும் ஜாதிக்கு எதிராக சமூக அமைப்புகள் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என்ற் நிறைவுரையாற்றினார்.
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் மாவட்டக் குழு மு. தங்கப்பாண்டியன் நன்றி உரையாற்றினார். இதில் கழகத் தோழர்கள் மதுரை மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மேலூர் பகுதிப் பொருப்பாளர் சத்தியமூர்த்தி, அழகர், முருகேசன், வாசுகி ஆகிய தோழர்களும் தோழமை அமைப்பு ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 30102025
