சிவகங்கை மண்டலத்தில் தொடர் பரப்புரை மாநில கல்வி உரிமைகளைப் பறித்து, மதவெறியைத் திணிக்கிறது, ஆரிய மாடல்

மதுரை – சிவகங்கை : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” தெருமுனைக் கூட்டங்களின் நிறைவாக சிவகங்கையில் 13.05.2022 வெள்ளி மாலை 5.00 மணியளவில் சிவகங்கை சண்முக ராஜா கலையரங் கில் இராமச்சந்திரனார் நினைவரங்கத் தில் மண்டல மாநாடு நடை பெற்றது.

மண்டல மாநாட்டிற்கு நா.முத்துக் குமார் தலைமை தாங்கினார். தவச் செல்வன், ரமேஷ் முன்னிலை வகித்தனர். அறிவுமதி வரவேற்புரை யாற்றினார்.

மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநிலப் பொரு ளாளர் திருப்பூர் துரைசாமி, மதுரை மாவட்டச் செயலாளர் மணியமுதன், மா.பா., மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் பெரியார் முத்து நன்றி கூறினார்.

முன்னதாக மாநில உரிமையை பறிக்காதே! கல்வி உரிமையை தடுக்காதே! மத வெறியை திணிக்காதே! எனும் முழக்கத்தோடு நமக்கான அடையாளம் திராவிட மாடல் தெருமுனைக் கூட்டங்கள் சிவகங்கை மதுரை மாவட்டங்களில் நடை பெற்றது.

சிவகங்கை மாவட்டம் : சிவ கங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி யில் 04.05.2022 அன்று தொடங்கி 13.05.2022 வரை தெருமுனைக் கூட்டங்கள் நடை பெற்றன.

தெருமுனைக் கூட்டங்கள் நடை பெற்ற இடங்கள் : சிங்கம்புணரி – திருப்பத்தூர் ஒக்கூர் – மதகுபட்டி – பாகனேரி – கல்லல் மானகிரி – கோவிலூர் – காரைக்குடி புதிய பேருந்து நிலையம் – கழனிவாசல் வாட்டர் டேங்க் – ஆரிய பவன் – புதுவயல் ஸ்ரீராம் நகர் – கல்லு பட்டறை பனந்தோப்பு – பாப்பா ஊரணி – கீழ ஊரணி செஞ்சை – சத்ரியன் தியேட்டர் தேவகோட்டை தியாகிகள் பூங்கா – ஒத்தக்கடை – சருகணி – திருவேகம்பத்தூர் – சாலை கிராமம் இளையாங்குடி – மறவ மங்கலம் – புலியடி தம்மம் – வேலாயுத பட்டினம் – வெற்றியூர் காளையார் கோவில் பூவந்தி ஆகிய இடங்களில் நடைபெற்றன.

தோழர்கள் பெரியார் முத்து, நா.முத்துக் குமார் ஆகியோர் அனைத்து நாட்களிலும் பரப்புரையில் ஈடுபட்டனர். தோழர்கள் புதுக்கோட்டை இளங்கோ, பவானி வேணுகோபால் ஆகியோர் பரப்புரையில் கலந்து கொண்டனர்.

மானகிரி சிபிஎம் – வேணுகோபால், சிபிஐ – பழனி ராமச்சந்திரன், பனந் தோப்பில் வழக்கறிஞர் மனோஜ் (தலித் இஸ்லாமியர் கூட்டமைப்பு) ஆகியோர் உரையாற்றினர்.

மதுரை மாவட்டம் : மதுரை மாவட்ட திவிக சார்பில் முதற் கட்டமாக மதுரை மாநகரில் 3 நாட்களில் 12 பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது..

மே 3 ஆம் தேதி காலை சிம்மக்கல் கலைஞர் சிலைக்கு மாலையணிவித்து கொள்கை முழக்கங்களோடு பரப்புரை தொடங்கியது. சிம்மக்கல் திமுக வட்ட செயலாளர் கழக தோழர்களை வாழ்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்.

நண்பகல் 12 மணிக்கு ஆறுமுக்கு சந்திப்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தை அதிமமுக பொது செயலாளர் பசும்பொன். பாண்டியன் தொடங்கி வைத்தார்.

பெத்தானியபுரம், செல்லூர், மீனாட்சிபுரம், புதூர் பேருந்து நிலை யம் – அண்ணா பேருந்து நிலையம் – அம்பிகா தியேட்டர் – அண்ணா நேதாஜி சிலை (மீனாட்சி அம்மன் கோவில் சந்திப்பு) – டி.எம்.கோர்ட்- திருப்பரங்குன்றம் – அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர்- வெ.கனியமுதன், தமிழ்புலிகள் கட்சியின் மாநில செய்தி தொடர் பாளர் முத்துக்குமார், ஆதித்தமிழர் பேரவை கலை இலக்கிய மாநில செயலாளர் இரா. செல்வம், தமிழ் தமிழர் இயக்கம் மாநில பொறுப்பாளர் பரிதி, தபெதிக மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ் பித்தன், மாவட்ட பொறுப்பாளர்கள் விடுதலை சேகர் – மாயாண்டி, ஆதித் தமிழர் கட்சி மாநில நிதி செயலாளர் விடுதலை வீரன், வண்ணார் பேரவை மாநிவ தலைவர் மணி பாபா, தமிழ்தேச குடியரசு இயக்கம் மெய்யப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாநில பொறுப்பாளர் குமரன், திமுக தலைமை கழகப் பேச்சாளர் ஜீவா, திருப்பரங்குன்றம் மதிமுக நகர செயலாளர் முருகேசன், மதுரை 53 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் நூர்ஜஹான்.

தமிழ்நாடு மாணவர் கழக தோழர்கள் திருப்பூர் சந்தோஷ், சபரி , சந்தோஷ் உள்ளிட்ட தோழர்கள் தெருமுனைக் கூட்டங்களில் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட செயலாளர். மா.பா.மணி அமுதன் தலைமையில் நடைபெற்ற இந்த பரப்புரையில் மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி, மேலூர் பொறுப் பாளர் சத்யமூர்த்தி, மாளவிகா, பிரபாகர் , திலீபன் செந்தில் , தோழர் வாசுகி ஆகியோர் பங்கெடுத்தனர்.

செய்தி : பரிமளராசன்

 

பெரியார் முழக்கம் 19052022 இதழ்

You may also like...