மதக்கலவரத்தை தூண்டும் ஆதினத்தை கைது செய்-மதுரையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதக்கலவரங்களை தூண்டும் விதமாக பேசி வரும் மதுரை ஆதினத்தை கண்டித்து 16-5-2025 அன்று காலை 10:30 அளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மதுரையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன நிகழ்வில் பால் பிரபாகான் (கழக பரப்புரைச் செயலாளர்) கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி (திவிக) தலைமையில் நிகழ்வு தொடங்கி, கனியமுதன்(விசிக), மீ.த பாண்டியன்(மதநல்லிணக்கக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்), பசும்பொன் பாண்டியன் (அ.தி.ம.மு.க), பேரறிவாளன் (பொதுச் செயலாளர் – தமிழ்ப் புலிகள்), கபீர் நகர் கார்த்திக் (ஆதித்தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர்), வரதராஜன் (பெரியார் நெறியாளர்), தமிழ்ப்பித்தன் (த.பெ.தி.க), ராமலிங்கம் (ம.க.இ.க மாநில ஒருங்கிணைப்பாளர்), அப்பாஸ் (மனிதநேய மக்கள் கட்சி), குமரன் (பு .இ.மு) ஆகியோர் கலந்து கொண்டு ஆதீனத்தைக் கண்டித்தும், அவரை கைது செய்யவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோழமை இயக்கங்களுடன் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வாசுகி, முருகேசன், வேங்கைமாறன் மற்றும் மேரி – (தமிழ்த் தேச மக்கள் முன்னணி), பரிதி – (தமிழ் தமிழர்இயக்கம்), சின்னப்ப தமிழர் (தமிழ் வழிக் கல்வி இயக்கம்), அமுதா மற்றும் ஆதரவாளர்கள் முன்னணிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புடன் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட காப்பாளர் தளபதி நன்றியுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசி வரும் மதுரை ஆதீனத்தின் மீது வன்முறை வெறுப்பு பேச்சுக்காக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய கோரியும், ஒற்றுமை சீர்குலைக்கும் விதமாக அவதூறும் பரப்பும் அவர் மீது இந்து சமய அறநிலையத்துறை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும்,

மர்ம மனிதர்களால் நிரம்பி வழியும் ஆதீனத்தை சுற்றி உள்ள கலவரக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு அரசுக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக வலியுறுத்தப்பட்டது.
பெரியார் முழக்கம் 01062025இதழ்.

You may also like...