மதுரையில் காதலர் தினம் ‘இந்து முன்னணி’க்கு கழகம் பதிலடி
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ராஜாஜி பூங்காவில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செய்தியறிந்து, அதே பூங்காவில் மதுரை திவிக சார்பில் காதலர் தின வாழ்த்து தெரிவித்து காதலர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது..
மேலும் “ஜாதி மறுத்து காதல் செய்வோம் – ஜாதி மறுத்து இணையேற்போம்” – ஜாதி மறுப்பு இணையர்களின் குழந்தைகளுக்கு “ஜாதியற்றோர் இட ஒதுக்கீடு வழங்கிடுக” என்று தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட செயலாளர் மா.பா. மணிஅமுதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, புலிப்பட்டி கருப்பையா மற்றும் விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவைத் தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 16022023 இதழ்