ஹிஜாப் – பா.ஜ.க. மிரட்டலுக்கு பதிலடி: மதுரையில் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் – தமிழ் தேச மக்கள் முன்னணி இணைந்து நடத்திய “மத வெறியர்களால் தூண்டப்படும் ஹிஜாப் அரசியல்” கருத்தரங்கம் மேலூரில் உள்ள ரஹ்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது..

இந்த நிகழ்வில் மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி வரவேற்புரையாற்றினார். தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்டத் தலைவர் ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட செயலாளர் மா.பா மணி அமுதன் தலைமை தாங்கினார். அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன். பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு அரசின் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வாஞ்சி நாதன், தமுமுக (ஹைதர் அலி) மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள்..

தமுமுக (ஹைதர் அலி ) மாவட்ட பொறுப்பாளர் பக்ருதீன் நிகழ்விற்கான பல உதவிகளை செய்து கொடுத்தார் தமுமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, தமிழ்ப்புலிகள் கட்சி உள்ளிட்ட தோழர்களும் கருங்காலக்குடி , நாவினிப்பட்டி , கீழையூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200 க்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றனர்.

மதுரை மேலூர் பகுதியில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் சதி திட்டங்களுக்கு எதிராக மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து செயல்படும் என மாவட்ட செயலாளர் மணிஅமுதன் உறுதியளித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப் பதிவில் தேர்தல் முகவராக இருந்த ஒரு பா.ஜ.க. பிரதிநிதி, ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த ஒரு பெண்ணை மிரட்டினார். அதைத் தொடர்ந்து வாக்குசாவடியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  அந்த வார்டில் இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

பெரியார் முழக்கம் 10032022 இதழ்

You may also like...