கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் மோடி அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 7.7.2025 அன்று மதுரையில் திருவள்ளுவர் சிலை அருகில் கிழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமாட்சி பாண்டி தலைமையில், சத்தியமூர்த்தி முன்னிலையில், வாசுகி அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். சிறப்புரையாக கழகத்தின் மாவட்ட காப்பாளர் தளபதி தொடக்க உரையாற்றினார். தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை இடம் மாறுதலுக்கு உட்படுத்திய ஒன்றிய மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமர்நாத் ராமகிருஷ்ணனை தமிழக தொல்லியல் துறை தலைவராக தேர்ந்தெடுத்து ஆய்வினை சிறப்புடன் நடத்த வழி செய்யவும், தமிழ்நாடு அரசை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழர் நாகரிகத்தை ‘பாரதீய’ நாகரிகம் என்று குழப்பும் சங்கி அடிமை மா.பா பாண்டியராஜனையும் – பாரதிய ஜனதா சங்கிகளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தோழமை அமைப்பு தோழர்கள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தனர். பசும்பொன் பாண்டியன் (அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர்), பேரறிவாளன் (பொதுச் செயலாளர் தமிழ் புலிகள் கட்சி), கபீர் நகர் கார்த்திக் (துணைப் பொதுச் செயலாளர் ஆதித் தமிழர் பேரவை), விடுதலை வீரன் (மாநில அமைப்புச் செயலாளர் திராவிடர் தமிழர் கட்சி), அமர்நாத் (மாநகர பொறுப்பாளர் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), தமிழ்ப்பித்தன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநில செயற்குழு உறுப்பினர்), குமரன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), தெய்வா வழக்கறிஞர் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாநகர பொறுப்பாளர்), மெய்யப்பன் (தமிழ் தேச குடியரசு இயக்கம்), நிலவழகன் (தலைவர் – மக்கள் தமிழகம் கட்சி), மணி பாபா (தலைவர் தமிழக வாழ்வுரிமை மக்கள் கட்சி), ராமலிங்கம் (மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் கலை இலக்கியக் கழகம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 17072025இதழ்
